ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு துசித குமார் டிசில்வா என்ற ஊடகவியலாளரும் அவரது குடும்பத்தினரும் அளுத்கம, ஹெட்டிமுல்லாவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் வைத்து ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளானர்.

அத்துடன் தாக்குதல் தாரிகள் ஆரம்பத்தில் ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மகனை அச்சுறுத்தியுள்ளதாகவும், பின்னர் வீட்டிலுள்ள பொருட்க்களுக்கு சேதம் விளைவித்தும் உள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஊடகவியலாளரும், அவரது மனைவியும் அளுத்கமவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே இத் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.