மஸ்கெலியா பொது மைதான கதவுகள் இன்று 9ஆம் திகதி காலை மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை கடின பந்து அணி மாணவர்கள் காத்திருந்ததை அறிந்த மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி உடன் மைதானத்திற்கு சென்று குறித்த பொது மைதான கதவை திறந்து வைத்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தவிசாளர் கூறுகையில்,

பாடசாலை மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் எம்மால் ஏற்படாது என்றும் இம்மைதான கதவை மூடியமைக்கான காரணமானது,மைதானம் தற்போது சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 

ஆகையால் அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும் ஆகவே தான் மைதானத்தை மூடிவைக்கப்பட்டது என தெரிவித்தார்.