கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கு ஹோட்டல் சுற்றுச் சூழலை விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.

நேபாளத்தில் நடைபெறும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்கள் நேபாளம் புறப்படுவதற்கு முன்னர் சுகததாச விளையாட்டரங்க ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளனர். இந் நிலையில் அவர்களுக்கு இதன்போது டெங்கு நுளம்பின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அமைச்சர் இந்த கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.

டெங்கு வைரஸ் தாக்கமானது நேபாளத்தில் இல்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இங்கிருந்தபோது தான் பாதிக்கப்பட்டிருக்க கூடும் எனவும் நம்புகின்றனர்.

எவ்வாறெனினும் அமைச்சரின் இந்த கண்காணிப்பின்போது பெருமளவான கழிவுகளும், பிளாஸ்டிக் போத்தல்களும் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.