ஹட்டன் அரச பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த காலை 6 மணி ஹட்டன் - சாமிமலை, சாமிமலை - கொழும்பு பஸ் சேவையும் மஸ்கெலியா - மறே, மறே - ஹட்டன் பஸ் சேவையும், மஸ்கெலியா -  காட்மோர், காட்மோர் - ஹட்டன் பஸ் சேவையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடை நிருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஹட்டன் அரச பஸ் நிலைய முகாமையாளரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது சாரதிகள் இல்லை எனவும் அதே போல் நடத்துனர்களும் இல்லை எனவும் 110 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் இருந்த போதும் நாளாந்தம் சாரதிகள்  நடத்துனர்கள் விடுமுறையில் செல்வதால் இவ்வாறான சேவைகள் நடத்த முடியாது உள்ளது. மேலதிகமாக 15 சாரதிகள், 15 நடத்துனர்கள் இணைத்து கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இதற்கு போக்குவர்த்து அமைச்சு முன்வந்து அப்பகுதிகளில் உள்ள  சாரதி நடத்துனர்களை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் எனவும் எதிர்வரும் 11ஆம் திகதி முதல்  சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பமாக உள்ளதால் அந்த யாத்திரிகளின் ரயில் அரச பஸ் இணைந்து நடாத்தும் சேவையையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவும் கடந்த தேர்தலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் பருவகால சீட்டை பெற்ற மக்களுக்கு  இச்சேவையை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது எனவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது பொது மக்களே என கூறினார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வந்து இச்சேவையை தொடர அதற்கான ஊழியார்களை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.