(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 

எனவே இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும். 

தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.