காட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் சிறுமியின் தந்தை படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு கற்பகக்கேணி கிராமத்துள்; நேற்றிரவு 9.00 மணியளவில் மாமியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

6 வயதுடைய இராசையா ரோஜினி என்ற சிறுமியே காட்டு யானைத்தாக்குதலில் பலியானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பலியான சிறுமியின் சடலம் தற்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலினால் பலர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்