உலகிற்கு புதிய தலையிடியை கொடுத்துள்ள சர்ச்சைக்குரிய சாமியார்

09 Dec, 2019 | 05:06 PM
image

இந்­தி­யா­வி­லி­ருந்து தப்­பி­யோ­டியவரும் தன்­னைத்­தானே 'கடவுள்' என்று கூறிக்­கொள்­ப­வரும்  கடத்தல் மற்றும் பாலியல் சம்­பந்­த­மான வழக்­கு­களில் தேடப்­ப­டு­ப­வ­ரு­மான நித்­தி­யா­னந்தா தனக்கு சொந்­த­மான ஆன்­மிகத் தேச­மொன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக இணைய வழி செய்­திகள் கூறு­கின்­றன.

மேலும், தாம் உரு­வாக்­கிய 'இந்து' தேசத்­துக்கு 'கைலாசா' என்று அவர்  பெயர் வைத்­துள்­ள­தா­கவும் அந்த செய்­திகள் குறிப்­பி­டு­கின்­றன. தாம் அமைத்­துள்­ள­தாக நித்­தி­யா­னந்தா குறிப்­பி­டு­கின்ற நாட்­டுக்­கான 'அதி­கா­ர ­பூர்வ' இணைய தளம் ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

https://kailaasa.org/ என்ற இணைய முக­வ­ரியில் காணப்­படும் அந்த தளத்தில் கைலாசா என்­பது எல்­லைகள் இல்­லாத தேசம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தங்கள் சொந்த நாடு­களில் முறைப்­படி இந்­துத்­து­வத்தை கடை­பி­டிக்க முடி­யாத உலகம் முழுவதும் வாழும் இந்­துக்­க­ளுக்­கான நாடு இது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது.

அந்த இணையதளம் 2018 ஒக்­டோபர் 21ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்டு இருக்­கி­றது என்று இணைய வல்­லு­நர்கள் தெரி­விக்­கி­றார்கள்.  2019 ஒக்­டோபர் 10ஆம் திகதி கடை­சி­யாக அந்தத் தளத்தில் பல தக­வல்கள் பதி­வேற்­றப்­பட்டு இருக்­கின்­றன. அந்தத் தளம் தென் அமெ­ரிக்க நாடான பனாமா நாட்டில் பதி­யப்­பட்டு இருக்­கி­றது.

அமெ­ரிக்­காவின் டெக்டாஸ் நகரில் அதன் முக­வரி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ளவு விப­ரங்கள் வெளி­யா­கி­யி­ருக்கும் போதிலும் நித்­தி­யா­னந்­தாவின் கைலாயம் எங்கு அமைந்­துள்­ளது என்­பது தெரி­ய­வில்லை.

நித்­தி­யா­னந்தா தன்­னு­டைய கைலா­யத்தை அநே­க­மாக தென் அமெ­ரிக்­காவில் இருக்கும் ஈகுவடோர் நாட்­டுக்கு சொந்­த­மான ஒரு தீவை வாங்கி உரு­வாக்கி இருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.  அதே­வே­ளை, பனா­மாவில் இருக்கும் தீவு ஒன்றை அவர் வாங்கி இருக்­கிறார் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

புதிய நாட்­டிற்­கான இயக்கம் அமெ­ரிக்­காவில் நிறு­வப்­பட்டு இந்து ஆதி சைவர்­களால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது என்­றாலும் இந்தப் புதிய கைலாய பூமி, சாதி, மதம், ஆண், பெண் என்ற பாகு­பாடு எது­வு­மின்றி எல்லா இந்­துக்­க­ளுக்கும் பொது­வா­னது என்று அந்த இணை­யத்­தளம் தெரி­விக்­கி­றது.

புதிய நாட்டு கொடியின் பெயர் 'ரிஷப துவஜா' என்று குறிப்­பி­டப்­பட்டு இருக்­கி­றது. அதில் நித்­தி­யா­னந்தா 'சிவ­பெ­ரு­மா­னாக' நந்­தி­யுடன் தோன்­று­கிறார்.

கைலாயம் நாட்­டுக்கு கல்வி, கரு­வூலம், வர்த்­தகம் உள்­ளிட்ட பல துறை­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சாங்கம் அமைந்­துள்­ளது. அதற்குப் பிர­த­மரும் நிய­மிக்­கப்­பட்டு இருக்­கிறார்.

'சனா­தன' இந்து தர்­மத்­திற்குப் புத்­துயிரூட்ட பாடு­படும் 'அறி­வொளி நாக­ரீகத் துறை' என்ற ஒரு துறையும் அந்த 'அரசில்' இடம்­பெற்றிருக்­கி­றது.

நித்­தி­யா­னந்தா தோற்­று­வித்­தி­ருக்கும் நாட்டில் தர்மப் பொரு­ளியல் நடப்பில் இருக்கும்.  முத­லீட்டு மற்றும் காப்­பு­றுதி வங்கி உரு­வாக்­கப்­படும். இணைய நாண­யமும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.

கைலாயம் நாட்­டிற்கு கட­வுச்­சீட்டும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. யார் வேண்­டு­மா­னாலும் குடி­யு­ரிமை கேட்டு விண்­ணப்­பிக்­கலாம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தன்­னு­டைய புதிய நாட்டை அங்­கீ­க­ரிக்­கும்­படி கேட்டு நித்­தி­யா­னந்தா சார்பில் ஐ.நா அமைப்­பிடம் மனுத் தாக்கல் செய்­யப்­பட்டு இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன் ஐ.நாவுக்கு அனுப்பியுள்ள தனது நாட்டை அங்கீகரிக்கும் மனுவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளை ஒப்புக் கொள்ளாவிட்டால்  தன்னை சுட்டுக் கொல்வதாக பொலிஸார் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்திய அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார்.

 இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் தன்னை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினர் என்றும்  அந்த மனுவில் கூறியுள்ளார்.

அதே­நேரம் அவரது இணையத்தில் தங்கள் நாட்டைப் பற்­றிய குறிப்பு என்ற இடத்தில் 100 மில்­லியன் ஆதி சைவர்கள், 2 பில்­லியன் இந்­துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்­கிலம், சமஸ்­கி­ருதம், தமிழ் ஆகி­யவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும்,  தெற்­கா­சி­யாவில் உள்ள 56 வேதாந்த தேசங்­களை சேர்ந்­த­வர்­களும், புலம் பெயர்ந்­த­வர்­களும் தங்கள் இனக்­கு­ழு­வினர் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவற்றின் இணைப்புப் பக்­கங்­களில் பல பத­விகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும், அவற்றில் யார் இருக்­கி­றார்கள் என்ற விவரம் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு துறைக்­கான பக்­கத்­திலும் அத்­து­றையில் பணி­யாற்ற விண்­ணப்­பிப்­ப­தற்கு ஒரு இணைப்பும் தரப்­பட்­டுள்­ளது.

யார் இந்த நித்தி­யா­னந்தா?

நித்­தி­யா­னந்தா  1978ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம் திகதி  தமிழ்­நாட்டில் திரு­வண்­ணா­ம­லையில் பிறந்தார்.  ராஜ­சே­கரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்த நித்­தி­யா­னந்­தாவின் குடும்பம் ஒரு சாதா­ரண விவ­சாய குடும்பம்.

இவரின் அப்பா ஒரு கூலித் தொழி­லாளி. பன்­னி­ரெண்டாம் வகுப்பு வரை இவர் அரச பள்­ளி­யி­லேயே படித்­துள்ளார். அதன் பின் அருணை பொறி­யியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

ஆரம்ப காலங்­களில் இவ­ர் கடவுள் நம்­பிக்கை அதிகம் கொண்­ட­வ­ரா­கவே காணப்­பட்­டுள்ளார்.  கல்­லூ­ரியில் சேர்ந்த முதல் இவரை கல்­லூ­ரியில் பார்ப்­பதை விட ஆல­யங்­களில் மட்­டுமே அதிகம் பார்க்க முடிந்­ததாம்.

நித்­தி­யா­னந்தா தனது பன்­னி­ரண்டாம் வயதில் அரு­ணாச்­சல மலை அடி­வா­ரத்தில்  1990ஆம்  ஆண்டு 'உடல் தாண்டி அனு­பவம்' எனும் பேரா­னந்த நிலை­யினை முதல் ஆன்­மிக அனு­ப­வ­மாக அைடந்தார்.

பதி­னேழாம் வயதில் வீட்டை விட்டு வெளி­யே­றிய இவர், பரி­வி­ரா­ஜக வாழ்க்­கை­யினைத் தொடர்ந்தார். பின்னர் இரண்­டா­யிரம் மைல்­க­ளுக்கு மேல் பாத­யாத்­தி­ரை­யாக நடந்து சென்ற இவர்  இந்­தி­யாவின் எல்லா ஆன்­மிக நிறு­வ­னங்­களைப் பற்­றியும் அவற்றின் செயற்­பா­டுகள் பற்­றியும் ஆராய்ந்து  அறிந்தார்.

குறிப்­பாக,  திபெத் வரை சென்ற நித்­தி­யா­னந்தா இம­ய­ம­லையில் பல கடு­மை­யான தவநிலையின் பின்னர் ஞான அனு­பூதி முக்தி எனும் பேரா­னந்த நிலை­யினை ஜன­வரி முதலாம் திகதி 2000ஆம் ஆண்டு அடைந்தார்.

தன்னுள் நிகழ்ந்து கொண்­டி­ருக்கும் நித்­திய ஆனந்தம் அனைத்து மனி­தர்­க­ளிற்கும் கிடைக்க வேண்­டு­மென்­ப­தற்­காக பர­ம­ஹம்ச நித்­தி­யா­னந்த தியா­ன­பீடம் என்ற சேவை நிறு­வ­னத்­தினை 2000 ஆம் ஆண்டில் பெங்­க­ளூரில் ஆரம்­பித்து வைத்தார். இந்­நி­று­வனம் 800 கிளை­க­ளுடன் 50 நாடு­களில் செயற்­ப­டு­கின்­றது.

இவர் தன்­னு­டைய சீடர்­க­ளுக்­காக சத்­சங்கம் மற்றும் தியான நிகழ்ச்­சி­களை நடத்­தி­வ­ரு­கிறார். உல­க­ள­வில் 10 மில்­லியன் பேர் இவரை பின்­பற்­று­ப­வர்­க­ளாக உள்­ளனர்.   மதுரை ஆதீ­னத்தின் இளைய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டு பின்னர் மக்­களின் எதிர்ப்­பினால் நீக்­கப்­பட்டார்.

தொடரும் சர்ச்­சைகள்

நடிகை ரஞ்­சி­தாவும் சுவாமி நித்­தி­யா­னந்­தாவும் நெருக்­க­மாக இருந்த காணொ­ளியை 2010 மார்ச் 2இல் சன் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பி­யது. இதன் தொடர்ச்­சியாய் ஆசி­ர­மத்தை விட்டு வெளி­யே­றிய நித்­தி­யா­னந்தா, இமாச்­சல பிர­தே­சத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் தங்­கி­யி­ருந்­த­போது 21 ஏப்ரல் 2010இல்  கர்­நா­டக பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

அத­னை­ய­டுத்து, 2010 ஜூனில் கர்­நா­டகா, ராம­ந­கரம் மாவட்ட பிடதி என்னும் இடத்தில் அமைந்­துள்ள நித்­தி­யா­னந்தா தியான பீடத்தில் நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக அதன் பீடா­தி­பதி நித்­தி­யா­னந்தா  மீது இரண்டு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

2012 ஜூனில் தனது ஆசி­ர­மத்தில் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் சந்­திப்­பின்­போது  செய்­தி­யா­ளரைத் தாக்­கி­ய­மைக்­கான  அவ­ருக்கு எதி­ராக பல்­வேறு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டன.

அதனைத் தொடர்ந்து கர்­நா­டக மாநி­லத்தின் முதல்வர் சதா­னந்த கவுடா ஆசி­ர­மத்தை மூடு­வ­தற்கு உத்­த­ர­விட்டார். நித்­தி­யா­னந்தா  தலை­ம­றை­வா­ன­தாக செய்­திகள் வந்த நிலையில் நீதி­மன்­றத்தின் முன் ஆஜ­ரானார். நித்­தி­யா­னந்­தா­வுக்கு அதே­யாண்டு ஜுன் 4இல் பிணை வழங்­கப்­பட்ட நிலையில் பொது அமை­திக்கு ஆபத்­தினை ஏற்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டில் மீண்டும் கைது செய்­யப்­பட்டார்.

 மைசூர் சிறையில்  அடைக்­கப்­பட்ட நித்­தி­யா­னந்­தா­வுக்கு மீண்டும் பிணை கிடைக்­கவும் அங்­கி­ருந்து வெளி­யே­றினார். அதன் பின்னர் எங்கு வசிக்­கின்றார் என்ற விட­யங்கள் வெளி­யா­காத நிலை­மையே நீடித்­தது.

இந்­நி­லையில்  தமி­ழ­கத்தைச் சேர்ந்த தம்­ப­திகள் குஜராத் உயர்­நீ­தி­மன்­றத்தில் சமீ­பத்தில் வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். தங்­க­ளது இரண்டு மகள்­க­ளையும் நித்­தி­யா­னந்தா கடத்தி வைத்­தி­ருப்­ப­தா­கவும், மீட்டுத் தர­வேண்டும் என்றும் கேட்­டி­ருந்­தனர்.

இந்தப் பெண்கள் இரு­வரும் அஹ­ம­தாபாத் ஆசி­ர­மத்தில் இருந்­தனர். இவர்­களும் நித்­தி­யா­னந்­தா­வுடன் வெளி­நாட்­டுக்கு சென்­றி­ருப்­ப­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. தமி­ழக தம்­ப­திகள் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் பொலிஸார்  நித்­தி­யா­னந்தா மீது முதல் தகவல் அறிக்­கையை பதிவு செய்­தனர் .

நாட்டை விட்டு வெளி­யே­றி­ய­து­ எப்­படி?

அவர் வெளி­நாட்­டிற்கு  தப்­பித்து சென்று இருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.  பாலியல் வழக்கில் கைது செய்­யப்­பட்டு,  பிணை­யி­லி­ருந்த நித்­தி­யா­னந்­தாவின் கட­வுச்­சீட்டும் காலா­வ­தி­யா­கி­யுள்­ளது. அப்­படி இருக்­கும்­போது எவ்­வாறு வெளி­நாட்­டிற்கு அவர் தப்பிச் சென்று இருக்­கலாம் என்ற கேள்­வியும் எழு­கி­றது.

எனினும்  கடந்த 18 மாதங்­க­ளுக்கு முன்னர் நித்­தி­யா­னந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஈக்குவடோர் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்தர்களுடன் தங்கியுள்ளதாகவும் அதனருகில் உள்ள தீவை தனிநாட்டை நிறுவும் நோக்குடன் விலைக்கு வாங்கியுள்ளதாகவும்  முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தீவு வாங்கலாமா என்று கேள்வி எழுகின்றபோது அதற்கும் சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர். ஆம், பெமா சட்டத்தின் பிரகாரம் அதற்கான அனுமதி உள்ளது. ஆனால் அதற்கான  வரி மட்டுமே அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

திடீர் அறிவிப்பு

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நேரலையில் திடீரென்று தோன்றிய நித்தியானந்தா, "நான் தினமும் திருவண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இணையத்தில் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்தியாவில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.

அப்போது நான் மூன்று கண், இல்லை இரண்டு கண் இல்லை ஒற்றை கண் மூலமாகப் பார்க்கப் போகிறேன். அதை அந்த இறைவனே முடிவு பண்ணட்டும். நான் பெற்ற கல்வி, ஞான அறிவு பெருமான் கொடுத்தது. இன்னும் பெருமான் கொடுத்த, கொடுக்கிற, கொடுக்கப்போகிற நன்மைகளை மக்களுக்குக் கொடுப்பேன்.

என் வாழ்க்கையில் திருவண்ணாமலை குரு பரம்பரை, காஞ்சிபுரம் குரு பரம்பரை, மதுரை பரம்பரை உதவியாக இருந்துள்ளன. பக்தர்கள் கொடுக்கும் பணம் இந்தியாவின் நன்மைக்கும் குருபரம்பரை நன்மைக்கும் பயன்படும். அன்றும் இன்றும் ஒரு கப் தயிர்சாதம்தான் சாப்பிடுகிறேன்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் அய்யா இருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்த நாராயணசாமி சாப்பிடாமல் மலை உச்சியில் சித்தராக வாழ்ந்தார். அந்த ஞானத்தைத்தான் இப்போது நான் உலகிற்குக் கொடுக்கிறேன்" என்று கூறி முடித்துள்ளார்.

ஆக, நித்தியானந்தாவின் சர்ச்சைகள் மட்டுமே இந்தியாவுக்கு தலையிடியாக இருந்த நிலையில், தற்போது தனிநாட்டு அறிவிப்பு உலகளவில் தலையிடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும், நித்தியானந்தாவின் அடுத்தகட்ட பிரதிபலிப்பினையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48