எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார்நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் தமக்கு வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினரால் தேர்தல் பிற்போடவில்லை எனவும் அவர் மேலும், தெரிவித்தார்.

கம்பளை நகரில் இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.