ரயில்களில் ஜீ.பீ.எஸ். (GPS) கருவி பொருத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த பணிப்புரையை, ரயில் சேவைக்குப் பொறுப்பான அமைச்சு வழங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இந்தக் கருவிகள் அடுத்த வாரமளவில், ரயில்களில் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம்  ரயில்களின் வருகை மற்றும் புறப்படுகை ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். 

இதேவேளை, ரயில் டிக்கட்டுக்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முற்கொடுப்பனவு முறையான ரீலோட் செய்துகொள்ளக் கூடிய டிஜிட்டல் அட்டையே இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், ரயில்களில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்கள் மூலம் இதனைச் செயற்படுத்த முடியும் என்றும், இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.