விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான்பேசியவிடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். 

உண்மையில் நான் அமைச்சர் தயாசிறியை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னர் தான் அவரை சந்தித்தேன். 

அதுவும் பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளின் போதே அவரை சந்தித்தேன். அந்தநேரத்திலும் எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பில் எதுவும் பேசவில்லை. 

அவருடன் நான் பேசியதாக இணையங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.  இணையங்களில் வெளிவரும் செய்திகள் பொய்யானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.