ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையமொன்றிற்கு அருகில் உள்ள இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட கத்யுஷா ரொக்கெட் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலானது அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பெறுப்பேற்க்காத நிலையில், இந்த தாக்குதலானது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அல்-அரேபியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஈராக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.