மிளகு உட்பட நாட்டில் பயிரிடப்படும் வாசனைத் திரவியங்களின் இறக்குமதியைக் கைவிடுவதற்கும், அவற்றை மட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Image result for வாசனைத் திரவியங்கள்

   பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ள இத்துறையை வலுப்படுத்துவதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இத்தீர்மானம் பின்னணியாக அமைந்துள்ளதாக, இலங்கை தேசிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் பந்துல திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

   அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம் உயர்ந்தபட்ச பயன்பாட்டை வர்த்தகர்கள் பெற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பிலான  தீர்மானத்திற்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களைத் தெளிவூட்ட இலங்கை தேசிய வர்த்தக சபை தயாராகியுள்ளது.

   அத்துடன்,  அரசாங்கம் வழங்கியுள்ள வரிச் சலுகை மூலம் வர்த்தகர்கள் வங்கிக் கடன் பெறுவதற்கான சந்தர்ப்பம் விரிவாக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் பந்துல திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

    புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இது நல்ல  சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

   இலங்கை தேசிய வர்த்தக சபையின் அடுத்த பொதுக் கூட்டத்தில் இது தொடர்பில் வர்த்தககர்களும், தொழில்துறையில் ஈடுபடுபவர்களும் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும், பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.