கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு தலைமை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியரிடம் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று விஷேட விசாரணைகளை நடத்தியது.   

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த கடத்தல் விவகாரத்தின் உண்மைத் தனமையை வெளிப்படுத்தும் நோக்கில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண்ணின் வாக்கு மூலம் அவசியமான நிலையில், நேற்று அவரிடம் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் குறித்த பெண்ணிடம் இன்றைய தினமும் வாக்குமூலம் பெற்று அறிக்கையொன்றை பதிவுசெய்த சி.ஐ.டி.யினர் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.