மீண்டும் அமைச்சராகி எஞ்சிய பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்: பி. திகாம்பரம்

Published By: J.G.Stephan

09 Dec, 2019 | 12:46 PM
image

நாட்டில் சஜித் பிரே­ம­தா­சவின் அனுதாப அலை வீசிக் கொண்­டி­ரு­கின்­றது. அவரின் தலை­மையில் பாரா­ளு­ மன்றத் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று மீண்டும் அமைச்­ச­ராகி நாம் விட்டுச் சென்­றுள்ள பணி­களை மீண்டும் தொடர்ந்து முன்­னெ­டுப்போம் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார்.

தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கான கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அட்டன் இந்­திரா விருந்­த­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

இக்­கூட்­டத்தில் மத்­திய மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் பிரதித் தலைவர் எம். உத­ய­குமார், பிரதி நிதிச் செய­லாளர் சோ.ஸ்ரீதரன், உப தலைவர் எம். ராம், அட்டன் நகர சபை உறுப்­பினர் அழ­க­முத்து நந்­த­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன் இளைஞர் அணித் தலைவர் பா. சிவ­நேசன் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள். நிகழ்வில் மாற்று தொழிற்­சங்­கத்தைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் சிலர் தொழி­லாளர் தேசிய சங்­கத்தில் இணைந்து கொண்­டார்கள்.  

இக்­கூட்­டத்தில் அவர் உரை­யாற்­று­கை யில், ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து நாட்டில் காபந்து அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. எந்த வித­மான நிதியும் கிடை­யாது. பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரும் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. நிதி இல்­லாமல் எந்­த­வொரு அபி­வி­ருத்தி வேலை­க­ளையும் செய்ய முடி­யாது. இந்த நேரத்தில் வாக்­கு­று­தி­களை மட்­டுமே வழங்க முடியும் வேறு ஒன்றும் செய்ய முடி­யாது.

மலை­ய­கத்தில் அமைச்சுப் பதவி ஏற்­றுள்­ள­வர்கள் தமது அமைச்சில் தேநீர் குடிக்­கவே பணம் இல்லை என்று கூறி­யுள்­ளார்கள். இந்த நிலையில் வீடு­களைக் கட்டிக் கொடுக்­கவும், நகர சபை­க­ளுக்கு கோடிக் கணக்கில் நிதி வழங்­கவும் முடி­யுமா என்­பதை மக்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். இது எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­ளவும் தமது தொழிற்­சங்­கத்­துக்கு அங்­கத்­த­வர்­களை அதி­க­ரித்துக் கொள்­ளவும் மக்கள் மத்­தியில் கூறு­கின்ற பொய்­யான வாக்­கு­று­திகள் என்­பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த நூறு நாள் வேலைத் திட்­டத்தில் 300 வீடு­களைக் கட்டிக் கொடுத்தோம். இன்னும் மூன்று மாத காலத்தில் எத்­தனை வீடுகள் மலை­ய­கத்தில் கட்டப் போகின்­றார்கள் என்­பதை நாம் பொறுத்­தி­ருந்து பார்ப்போம். நாடு கடன் சுமையில் இருக்­கின்­றது. அர­சாங்கம் “வெட்”­வ­ரியைக் குறைத்­துள்­ளதால் 500 பில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. வரு­மானம் இருந்தால் தான் சாதா­ர­ண­மாக ஒரு குடும்­பத்­தையே நடத்த முடியும் என்றால், நாட்டைக் கொண்டு நடத்­து­வ­தற்கு வரு­மானம் இல்­லாமல் எதையும் செய்ய முடி­யுமா?

எனவே, பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பிற­குதான் உண்­மை­யான அபி­வி­ருத்தி வேலை­களை செய்ய முடியும். அது­வரை யாரு­டைய பேச்­சையும் கேட்டு மக்கள் ஏமாந்து விடக்­கூ­டாது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பிறகு சஜித் மீது மக்கள் மத்தியில் அனுதாப அலை ஏற்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அவரது தலைமையில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்ற பிறகு பேரம் பேசித்தான் அமைச்சுப் பதவியை பெறுவோமே தவிரம் வெறுமனே ஆதரவு கொடுத்து மக்களை ஏமாற்றமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02