இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட திமுத் காருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இஸ்லாமபாத்தை சென்றடைந்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 11 திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை ராவல்பிண்டியிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி 19 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை 23 வரை கராச்சியிலும் இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இத் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணிக்குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் டெங்கு காய்ச்சல் காரணமாக தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அவரின் இடத்திற்கு அசித பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.