லா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை தோற்கடித்தது.
பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 ஆவது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர்.
இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி ‘ஹெட்ரிக்’ கோல் அடித்ததமையும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும்.
இது அவருக்கு 35 ஆவது ‘ஹாட்ரிக்’ ஆகும்.
இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனை பட்டியலில் ரியல்மாட்ரிட் முன்னாள் வீரர் கிறிஸ்டியானா ரொனல்டோ 34 ஹெட்ரிக்குடன் அடுத்த இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM