இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையானது 15 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலையானது 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தேசத்‍தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வரி குறைப்பு நடவடிக்கையினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.