தீவகப் பகுதியில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடல் வள உற்பத்திக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் தேவையானவர்களுக்கு கடனுதவித் திட்டங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று(07.12.2019) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், முதற்கட்டமாக தீவகப் பகுதியில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, கடல் பாசி போன்ற திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுள்ளது.

தொழில்சார் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இன்றைய கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டு, கடல் வள உற்பத்திகளை துரிதமாக அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

அதேவேளை, தீவகப் பகுதியில் நிலவுகின்ற நன்னீர் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டிரு;நதமை குறிப்பிடத்தக்கது.