(தி.சோபிதன்)

வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும்,பிரதமரும் இனம் காணவில்லை அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண ஆளுநர் விடயத்தில் தமிழர் ஒருவரை நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்காக நல்லதொரு தமிழரை இன்னும் ஜனாதிபதியும்,பிரதமரும் கண்டுபிடிக்கவில்லை போல அதனால்தான் இழுபறி நிலை காணப்படுகின்றது.

சிலர் இன்னாரை ஆளுநராக நியமியுங்கள் என கூறுகின்றனர்,சிலரை பரிசீலித்து வருகின்றனர்.எனினும் இன்றுவரை நல்லதொரு தமிழரை இனம் காணவில்லை போல அதனால்தான் இன்னும் வடக்குக்கு ஆளுநர் நியமிக்கப்படவில்லை என்றார்.