கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் 1 வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தை மீது தென் னைமரம் சரிந்து விழுந்ததில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் பாட்டி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு வதாவது, 

குழந்தையை குழந்தையின் பாட்டி குளிப்பாட்டியுள்ளார். இதன்போது அருகில் இருந்த தென்னைமரம் அடியோடு சரிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் குழந்தை உயிரிழந்துள்ளது. 

இதையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.