மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது. 

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ரோகிர் சர்மா 15 ஓட்டத்தையும், கே.எல்.ராகுல் 11 ஓட்டத்தையும், சிவம் டூப் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டத்தையும், விராட் கோலி 19 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் அய்யர் 10 ஓட்டத்தையும், ஜடேஜா 9 ஓட்டத்தையும், வொஷிங்டன் சுந்தர் டக்கவுட்டுடனும், ஆட்டமிழக்க ரிஷாத் பந்த் 33 ஓட்டத்துடனும், தீபக் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஹேடன் வால்ஷ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல் மற்றும் கரி பியர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.