முல்லைத்தீவில் விவசாய அமைச்சின் பாரம்பரிய உணவு விற்பனை மையம்

Published By: Priyatharshan

02 Jun, 2016 | 10:03 AM
image

( மயூரன் )

முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஏழு மில்லியன் ரூபா செலவில் இந்த உணவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமம் முல்லை என்ற பெண்கள் விவசாய விரிவாக்க அமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

போசாக்குக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளை நுகரும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்யும் நோக்குடனும் உள்ளுர் உற்பத்திக்கான சந்தை வாய்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடனும் இந்த விற்பனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டத்திலும் பாரம்பரிய உணவு விற்பனை மையத்தை அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

முல்லை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன், யாசீன் ஜவாகீர், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04