இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இன்று இரவு பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத் தொடரில்  இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று அணியுடன் பாகிஸ்தானுக்கு பயணக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசிதா பெர்னாண்டோ  முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் அணியில் சேருவார், என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.