(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை  விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, அடைக்களம் கோரி, விடுமுறையும் கோராது அறிவிப்பின்றி வெளி நாட்டுக்கு சென்றமை தொடர்பில், முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர மற்றும், உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேரா ஆகியோரிடம் எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு வாக்கு மூலம் பெற்றுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின்  மேற்பார்வை அதிகாரியாக உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேராவே இருந்த நிலையில் அவரிடமும், பணிப்பாளராக ஷானி அபேசேகர இருந்த நிலையில் அவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

சாந்த சில்வா, விடுமுறை தொடர்பில் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் இவ்வாறு வெளி நடடுக்கு சென்றார் என்பதை உறுதி செய்துகொள்ளவே இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.