(எம்.எப்.எம்.பஸீர்)

இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, கஜபா ரெஜிமென்ட்டின் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இராணுவத் தளபதி லெப்டினன் கொமாண்டர் சவேந்ர சில்வா  இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 

இந் நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராக செயற்படுவார் என இராணுவ தலைமையகம் தெரிவித்தது.

தற்போது இராணுவ ஊடகப் பேச்சாளராக கடமையாற்றும், சிங்க ரெஜிமென்ட்டைச் சேர்ந்த பிரிகேடியர் சுமித் அத்தபத்து இராணுவ தலைமையகத்துக்கு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன்னாள் இராணுவ ஊடகப் பேச்சாளர்  ரவிநாத் ஜயவீரவின் பதவி உயர்வைத் தொடர்ந்து பிரிகேடியர் சுமித் அத்தபத்து இராணுவ ஊடகப் பேச்சாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.