ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல்

Published By: Robert

02 Jun, 2016 | 09:57 AM
image

அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது.

1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்து கொண்டவர்களின் நடத்தையை 6 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்துள்ளனர். 

முடிவில் அவர்கள் சில உண்மைகளை கண்டறிந்துள்ளனர். அதாவது, வாரத்தில் பலமுறை ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கும் உள்ளவர்கள், அதிக கடவுள் பக்தி உடையவர்களாக மாறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் போது, நம் மதக் கோட்பாட்டின் படி நாம் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு பயம் ஏற்படுகிறது. அந்த பயம் கடவுள் பக்தியை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right