மலையகத் தலைமைகளுக்கு தொலைநோக்கு அவசியம்

08 Dec, 2019 | 04:18 PM
image

துரை­சாமி நட­ராஜா     

மலை­யக மக்கள் பல துறை­க­ளிலும் உரிய அபி­வி­ருத்­தி­யினை அடை­யா­துள்­ளனர். இவர்­களின் அடை­வுகள் தேசிய மட்ட நிலை­களில் இருந்தும் மிகவும் பின்­தங்­கி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. எனவே இம்­மக்­களின் பல் துறைசார் அபி­வி­ருத்தி கருதி அர­சாங்கம் விசேட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­துடன் சலு­கைகள் பல­வற்­றையும் வழங்­குதல் வேண்டும் என்ற கோரிக்­கைகள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதே­வேளை மலை­ய­கத்து தலை­மை­களின் வகி­பாகம் இம்­மக்கள் தொடர்பில் எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது குறித்தும் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றன. மலை­யக மக்­களின் வழி­ந­டத்­துகை தொடர்பில் தெளி­வான சிந்­தனை மற்றும் தொலை­நோக்கு என்­பன  தலை­மை­க­ளுக்கு அவ­சியம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மலை­யகத் தலை­மை­க­ளுடன் மலை­யக அமைப்­பு­களும் கைகோர்த்து மக்­களின் எழுச்­சிக்கு வலு­சேர்க்க வேண்டும் என்ற கோஷங்­க­ளையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

19 ஆம் நூற்­றாண்டில் இலட்­சக்­க­ணக்­கான தமிழ்த் தொழி­லா­ளர்கள் இலங்­கையில் மட்­டு­மன்றி இன்னும் பல நாடு­க­ளிலும் தீவு­க­ளிலும் சென்று குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். இவ்­வாறு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­வர்­களின் வாழ்க்கை நிலை­மைகள் மிக மிக மோச­ம­டைந்து காணப்­பட்­டன என்­பது சொல்லித் தெரி­ய­வேண்­டிய ஒரு விட­ய­மல்ல. அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யாக  அடக்கி ஒடுக்­கப்­பட்டு முதலில் பிரித்­தா­னிய, பிரான்­சிய ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் பின்பு சுதேச ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் அந்­தந்த நாடு­க­ளையும் தீவு­க­ளையும் சேர்ந்த சுதேச இனத்­த­வர்­க­ளாலும் தொழி­லா­ளர்கள் அல்­லாத ஏனைய தமி­ழர்­க­ளாலும் ஏனைய இந்­தி­யர்­க­ளாலும், வணி­கர்கள், அதி­கா­ரிகள், தோட்ட உத்­தி­யோ­கத்­தர்கள், பிற அலு­வ­லர்கள் ஆகிய பல­ராலும் கொடூ­ர­மாக சுரண்­டப்­பட்­டுள்­ளனர். இன்னும் சுரண்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தனை புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி உள்­ளனர். மேலும் இத்­த­கைய நாடு­க­ளிலும் தீவு­க­ளிலும் வாழும் தமிழ்த் தொழி­லா­ளர்­களில் பெரும்­ப­கு­தி­யினர் இன்று தமிழ் பேசவோ எழு­தவோ வாசிக்­கவோ தெரி­யாத நிலையில் காணப்­ப­டு­வ­தா­கவும் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.

பிரித்­தா­னி­யரின் மோக வலையில் சிக்கி தனது தாய­கத்தில் ஏற்­பட்ட பஞ்­சத்தின் கொடு­மையைப் போக்­கவும் அதற்கு மேலாக பண்­ணை­யா­ளர்­களின் கொடு­மையில் இருந்து தப்பி விமோ­சனம் தேடவும் புறப்­பட்ட இலட்­சோ­ப­லட்ச தமிழ்த் தொழி­லா­ளர்கள் இலங்­கை­யிலோ பிற இடங்­க­ளிலோ தொடர்ந்தும் பட்­டி­னி­யாலும் வறு­மை­யி­னாலும் கொடூ­ர­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­மையை புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி கண்­களைக் குள­மாக்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இதே­வேளை மு.நித்­தி­யா­னந்தன் தனது நூல் ஒன்­றிலே மலை­யக மக்கள் பட்ட இன்­னல்­களைத் தெளி­வாகக் குறிப்­பிட்டு கூறி இருக்­கின்றார். இலங்­கையில் மத்­திய மலை­நாட்டில் பெருந்­தோட்­டங்கள் திறக்­கப்­பட்டு அவை கால­னி­களின் கொள்ளைக் காடாக மாறிய காலத்தில் தென்­னிந்­தி­யாவில் இருந்து கூலி­க­ளாகக் கொண்டு வந்து குவிக்­கப்­பட்ட தொழி­லா­ளர்கள் இக்­கொ­டூர சுரண்­டல்­க­ளுக்கு பூர­ண­மாக இரை­யாக நேர்ந்­தது. குறு­கிய காலத்­திற்குள் இலா­பத்தை குவித்­துக்­கொண்­டு­விடும் பேராசை வெறியைத் தவிர தோட்ட முத­லா­ளி­களை உந்­திய காரணி வேறெ­து­வு­மே­யில்லை. இந்தத் தோட்­டத்­து­ரை­மாரின் கொடும் ஒடுக்­கு­மு­றையும் கடு­மை­யான தொழில் நிலை­மை­களும் குறைந்த சம்­ப­ளமும் நோயும் மர­ணமும் தொழில் உற­வு­களை போராட்­டக்­க­ள­மாக மாற்­றிக்­கொண்­டி­ருந்­தன. தோட்ட லயன்கள் சிறைக்­கூ­டங்­க­ளா­கவே அமைந்­தன. இந்த வதை­மு­காம்கள் தோட்ட லயன்­களைத் தான் நினை­வுக்கு கொண்­டு­வரும். கூலி, அடிமை முறையில் வாழும் தொழி­லா­ளர்­களை பட்­டி­களில் அடைந்து வைப்­பதன் குறி­யீ­டா­கத்தான் இன்னும் அந்த லயன்கள் விளங்­கு­கின்­றன என்று நித்­தி­யா­னந்தன் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார்.

ஊழியச் சிறைக் கூடங்கள் தான் லயன்கள் என்­ற­வாறு  டேவிட் செல்போன் தனது கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். பெருந்­தோட்­டங்­களில் குடி­யேறி வாழ்ந்த இந்­தியத் தமிழ்த் தொழி­லா­ளர்கள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைகள் இந்­தியத் தமிழர் தொழிற்­சங்கம் படிப்­ப­டி­யாக வளர்ச்­சி­ய­டைந்­தமை, அவர்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­காக போராட எழுச்­சி­யுற்ற  தொழிற்­சங்க இயக்­கத்தின் பல்­வேறு அம்­சங்கள் இந்­தியத் தமிழர் பிரச்­சினை எவ்­வாறு தோன்­றி­யது என்­பது பற்

­றியும் அப்­பி­ரச்­சினை குறித்து சம்­பந்­தப்­பட்ட அர­சாங்­கங்­களும் இந்­தியத் தமிழ் இயக்­கங்­களும் மேற்­கண்ட நிலைப்­பா­டுகள் மற்றும் அணு­கு­மு­றைகள்  போன்ற பல்­வேறு விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­க­ரனின் “இலங்கை இந்­தியர் வர­லாறு” அமைந்­தி­ருக்­கின்­றது. இந்­நூலின் மையப்­பொருள் பற்றி அங்­கில மொழியில் ஏரா­ள­மான ஆய்வுக் கட்­டு­ரை­களும் சில நூல்­களும்  வெளி­வந்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மலை­யக சமூ­கத்­த­வர்கள் ஆரம்ப காலம் தொட்டே இந்­நாட்டில் பல்­வேறு சவால்­க­­ளுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இச்­ச­வால்­களும் சிக்­கல்­களும் இன்னும் தீர்ந்­த­பா­டில்லை. இவை தொடர்­க­தை­யா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இவற்­றுக்கு எவ்­வ­கை­யி­லேனும் உரிய தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டுதல் வேண்டும். மலை­யக சமூ­கத்­த­வர்கள் அர­சியல் , பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், தொழில்­வாய்ப்பு, சமூக நிலை­மைகள், இருப்­பிட வசதி என்­ப­வற்­றிலும் இன்னும் அபி­வி­ருத்­தி­யி­னைக்­கா­ண­வேண்­டி­யுள்­ளது. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் ஏற்­க­னவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் 'பிர­சா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை பறிப்பு’  நட­வ­டிக்­கை­யினால் பல்­வே­று­பா­தக விளை­வு­க­ளையும் சந்­தித்­தி­ருந்­தனர். அர­சாங்க தொழி­லுக்கு விண்­ணப்­பம்­கூட அனுப்ப முடி­யாத நிலைமை இவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னி­டையே ஐக்­கிய தேசியக் கட்சி மீண்டும் பிர­சா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் வழங்கி தனது முன்­னைய செய­லுக்கு பிரா­யச்­சித்தம் தேடிக்­கொண்­டது. இதனைத் தொடர்ந்து மலை­யக மக்கள் மெது­மெ­து­வாக அபி­வி­ருத்திப் பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யுள்­ளனர் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை. இந்­நிலை துரி­தப்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். 

கல்­வியில் பின்­ன­டைவு

தோட்டத் தொழி­லா­ளர்­களை சகல துறை­க­ளிலும் வேர­றுத்து அம்­மக்­களை நிர்­வா­ணப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. இம்­மக்­களின் கல்வி ரீதி­யான ஒடுக்கு முறை­களும் இவற்றுள் அடங்­கு­கின்­றன. தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளுக்கு கல்­வியைப் பெற்­று­விடக் கூடாது என்­பதில் தோட்ட நிர்­வா­கிகள் கவ­ன­மாக இருந்­தனர். தோட்ட முகா­மைத்­துவம் பிள்­ளை­களின் கல்வி தொடர்பில் எது­வித கரி­ச­னை­யையும் கொண்­டி­ருக்­க­வில்லை. தொழி­லா­ளர்­களே தமது தோட்ட லயன்­களில் பள்­ளி­களை ஆரம்­பித்து கொண்டு நடத்­தினர். இவை தமி­ழ­கத்தில் இருந்த திண்ணைப் பள்­ளிக்­கூ­டங்­களின் சாயலில் அமைந்­தி­ருந்­தன என்று பேரா­சி­ரியர் தை .தனராஜ் தனது நூல் ஒன்றில் குறிப்­பி­டு­கின்றார். பின்னர் கங்­கா­ணிகள் தோட்­டத்தில் இரண்டு வகை­யான பாட­சா­லை­களை ஆரம்­பித்­தனர். தமது சொந்த நாட்­டி­லேயே மிகவும் இழி­வான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ்  கூலிக்கு எத­னையும் விளங்­கிக்­கொள்ளக் கூடிய உள­ஆற்றல் இல்லை. எனவே அவனை மிஷ­ன­ரி­மா­ருக்கு பய­னுள்ள வகையில் உரு­வாக்­கிக்­கொள்ள ஏதா­வது கொஞ்சம் சொல்லித் தந்தால் அதுவே போது­மா­னது என்ற இழி­வான எண்ணம் தோட்ட நிர்­வா­கிகள் பல­ரிடம் காணப்­பட்­டது. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளையும் அவர்­களின் பிள்­ளை­க­ளையும் தொடர்ந்தும் அடி­மை­க­ளா­கவே வைத்து தனது காரி­யத்தை சாதித்­துக்­கொள்­ளவே இவர்கள் முனைந்­தனர்.

தோட்டப் பாட­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­றதைத் தொடர்ந்து மலை­யக பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பாதையில் காலடி வைக்­கத்­தொ­டங்­கின. பல்­வேறு ஆய்­வு­களும் மேற்­கொள்­ளப்­பட்டு அபி­வி­ருத்­திக்கு வலு­சேர்க்­கப்­பட்­டது. இலங்­கையின் எழுத்­த­றிவு வீத­மா­னது 2012 ஆம் ஆண்டில் பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது. நகரப் பகுதி 97.7, கிரா­மப்­ப­குதி 95.7, தோட்டப் பகுதி  81.7 என்று எழுத்­த­றிவு வீத­மா­னது அமைந்­தி­ருந்த நிலையில் இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் அந்த வரு

­டத்தில் 95.7 வீத­மாக இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.  இதே­வேளை 2012 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி ஆண்­க­ளி­டையே எழுத்­த­றிவு வீதம் 83.4 ஆகவும், தோட்­டப்­ப­குதி பெண்­க­ளி­டையே 80.9 ஆகவும் காணப்­பட்­டது. சம­கா­லத்தில் மலை­யக பாட­சா­லைகள் பல தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆசி­ரியர் நிய­ம­னங்கள்  பெற்றுக் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆரம்பக் கல்­வித்­து­றையில் விருத்தி நிலை ஏற்­பட்டு வரு­கின்­றது. எனினும் உயர் கல்­விக்­கான வாய்ப்­புகள் அதி­க­ரிக்­க­வேண்­டிய தேவை இருக்­கின்­றது. பாட­சா­லைக்குச் செல்லும் மாண­வர்­களின் தொகையை அதி­க­ரிப்­ப­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­போதும் பாட­சா­லைக்குச் செல்­லாத பல மாண­வர்கள் இன்னும் இருந்­து­கொண்­டுதான் இருக்­கி­றார்கள். 

2012 ஆம் ஆண்டு தகவல் ஒன்­றின்­படி 16.6 வீத­மா­ன­வர்கள் பெருந்­தோட்டப் பகு­தி­களில் இருந்து பாட­சா­லைக்குச் செல்­வ­தில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. பேரா­சி­ரியர்  மா.செ. மூக்­கையா தனது கட்­டுரை ஒன்றில் குறிப்­பி­டு­கையில், உலகின் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களின் பல்­க­லைக்­க­ழகக் கல்­வியின் நிலை­வரம் 25 – 40 வீத­மாகக் காணப்­பட இலங்­கையில் அது 04 வீத­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதுவே மிகவும் பின்­தங்­கி­விட்ட ஒரு நிலை­யாகும். ஆனால் தோட்­டப்­புற சமூகம் அதனை விடவும் பார­தூ­ர­மான நிலையில் பின்­தங்கிக் காணப்­ப­டு­வது என்­பது இச்­ச­மூ­கத்­தி­னரின் கல்­வியில் பின்­தங்­கிய பார­தூ­ர­மான குறை நிலை­யையே பிர­தி­ப­லிக்­கின்­றது. பாட­சா­லைக்குச் செல்­லா­த­வர்­க­ளாக 16.6 வீதத்­தி­னரும், ஐந்து வரு­டங்­களே பாட­சாலை சென்­ற­வர்கள் 32.0 வீதத்­தி­ன­ரு­மாகக் காணப்­ப­டு­கின்­றனர். 10 வருட கல்வி பெற்­ற­வர்கள் 7.2 வீதத்­தி­ன­ரா­கவும், க.பொ.த. உ/தர கல்வி பெற்­ற­வர்கள் 2.6 வீதத்­தி­னர்­க­ளா­கவும் உள்­ளனர். ஆண்­க­ளதும் பெண்­க­ளதும் கல்விப் பெறு­பே­று­களைக் கவ­னித்தால் அப்­போது இவர்­களில் பெண்­க­ளது நிலைமை இன்னும் பின்­தங்­கி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது என்று பேரா­சி­ரியர் மூக்­கையா தெரி­விக்­கின்றார். 

மலை­யக  பாட­சா­லை­களில் துறை­சார்ந்த ஆசி­ரியர் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. வளப்­பற்­றாக்­கு­றைகள் உரி­ய­வாறு பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. விஞ்­ஞான, கணித பாடங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும். மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவை குறித்த பார்­வை­யினை அர­சி­யல்­வா­திகள் செலுத்­துதல் வேண்டும். 

பொரு­ளா­தாரம்

மலை­யக மக்­களின் பொரு­ளா­தாரம் சார்ந்த பிரச்­சி­னைகள் அதி­க­முள்­ளன. உழைப்­புக்கும் ஊதி­யத்­துக்கும் இடையே பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது. கூட்டு ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல விட­யங்கள் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் கூட்டு ஒப்­பந்தம் எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளதா? உரிய சம்­பள உயர்­வா­னது கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக கிடைக்­கின்­றதா? என்­ப­தெல்லாம் கேள்­விக்­கு­ரிய விட­ய­மே­யாகும். தோட்­டத்தில் கிடைக்­கின்ற வரு­மா­னத்தைத் தவிர இவர்கள் மேல­திக வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு நிலை காணப்­ப­டு­கின்­றது. கூட்டு ஒப்­பந்த நடை­முறை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள நிலையில், வெளியார் உற்­பத்­தி­முறை தொடர்பில் அதி­க­மா­கப்­பே­சப்­பட்டு வரு­கின்­றது. இம்­மு­றையின் மூல­மாக தொழி­லா­ளர்கள் கணி­ச­மான வரு­மா­னத்தை ஈட்டிக் கொள்ளும் வாய்ப்பு உரு­வாகும் என்றும் நம்­பிக்கை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தோட்டத் தொழி­லா­ளர்­களை சிறு­தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக்கும் நிலைமை தொடர்பில் மலை­யக கட்­சிகள் கவனம் செலுத்­தி­வ­ரு­கின்­றன. 

தோட்­டங்­களை கிரா­மங்­க­ளாக்கும் முயற்சி  குறித்த கருத்­துக்­களை பலர் வெளி­யிட்­டுள்­ள­போதும் இது இன்றும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் அழுத்­தமும், ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களும் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும். வெறு­மனே விளம்­ப­ரத்­துக்­காக பல்­வேறு கோரிக்­கை­க­ளையும் முன்­வைப்­பது சில மலை­யக அர­சி­யல்­வா­தி­களின் வழக்­க­மாக உள்­ளது. இந்­நி­லையில் சமூகம் குறித்த வலி­யு­டனும், இதய சுத்­தி­யு­டனும் இவர்கள் செயற்­பட முன்­வ­ருதல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்கள் தினக்­கூலி பெறு­ப­வர்­க­ளாக உள்­ளனர். குறைந்த அளவு கல்வி மற்றும் சந்­தைப்­ப­டுத்­தக்­கூ­டிய திறன்கள் இல்­லாமை அவர்­க­ளு­டைய அசைவை மிகவும் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது என்று எம்.வாம­தேவன் சுட்­டிக்­காட்­டு­கின்றார். எனவே தோட்­டங்­களில் காணப்­ப­டு­கின்ற கீழ்­உ­ழைப்பு நிலை­மை­யா­னது அங்­குள்ள வறுமை நிலையை தீவி­ரப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றாகும் என்றும் அவர் மேலும் தெரி­விக்­கின்­றமை நோக்­கத்­தக்­க­தாகும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் வரு­மான அதி­க­ரிப்பு கருதி பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். சுய­தொழில் விருத்­திக்கு உத­வி­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். கடன் வச­திகள், இடம் எனப்­ப­லவும் இதில் உள்­ள­டங்கும். தோட்­டப்­ப­கு­தி­களில் காணப்­படும் பயன்­ப­டுத்­தப்­ப­டாத நிலங்­களை தொழி­லா­ளர்­களின் பயிர்ச்­செய்கை நட­வ­டிக்­கை­க­ளுக்­கென்று பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்­பிலும் அர­சி­யல்­வா­திகள் விசேட கவனம் செலுத்­துதல் வேண்டும். தொழி­லா­ளர்கள் நாட்­கூ­லி­க­ளாக உள்ள நிலையில் மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்கை குறித்தும் கவனம் செலுத்­துதல் வேண்டும். 

இளைஞர் அபி­வி­ருத்தி

ஒரு நாட்டில் ஒரு சமூ­கத்தில் இளைஞர் சக்தி முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. பல உலக வர­லா­று­களை இளைஞர் சக்தி மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்­றது. பல தலை­வர்கள் ஆட்­சி­பீ­ட­மே­று­வ­தற்கு இளை­ஞர்­களின் வகி­பாகம் என்­பது அதி­க­மாக இருந்­தி­ருக்­கின்­றது. இந்த வகையில் மலை­யக இளை­ஞர்­களின் சக்­தியும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. மலை­யக இளை­ஞர்கள் சகல  துறை­க­ளிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். உரிய வாய்ப்­புகள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டுதல் வேண்டும். தேர்தல் காலங்­களில் இளை­ஞர்­களின் உத­வி­யினைப் பெற்­றுக்­கொள்ளும் அர­சி­யல்­வா­திகள் பின்னர் அவர்­களை புறந்­தள்ளிச்  செயற்­ப­டு­வ­தாக, கைக­ழுவி விடு­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. எனவே இளைஞர் வலு­வூட்டல், அபி­வி­ருத்தி குறித்த திட்­டங்­களை அர­சி­யல்­வா­திகள் முன்­வைக்க வேண்டும். அவர்­களின் தகை­மைக்­கேற்ற தொழில்­வாய்ப்­புகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­டுதல் வேண்டும். உரிய தகைமை இல்­லாது குறைந்த பெறு­பே­று­க­ளுடன் பாட­சா­லையை விட்டு வெளி­யேறும் இளை­ஞர்­களின் நலன் கருதி தொழிற்­ப­யிற்சி நிலை­யங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­டுதல் வேண்டும். இளை­ஞர்­க­ளுக்­கான உயர்­கல்வி வாய்ப்­புகள் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­தலும் வேண்டும். 

மலை­யக மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்று பர­வ­லாக கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இதற்­கேற்­ற­வாறு காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெ­றுதல் வேண்டும். வாரிசு அர­சியல் கலா­சா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு ஆளு­மை­யுள்ள, திற­மை­யுள்ள இளை­ஞர்­க­ளுக்கு அர­சி­யலில் இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும். இளை­ஞர்­க­ளி­டையே புதிய சிந்­த­னைகள், கருத்­துகள் பலவும் காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் நியாயத் தன்­மையை உணர்ந்து இவற்­றுக்கு மதிப்­ப­ளிக்­கவும், அங்­கீ­க­ரிக்­கவும் வேண்டும். இளை­ஞர்­களை புறக்­க­ணிப்­பதால் ஏற்­படும், ஏற்­பட்ட விப­ரீ­தங்­களை யாரும் மறந்து விடுதல் கூடாது. 

மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வீட்டு வச­திகள் பின்­தங்­கிய நிலை­மையில் உள்­ளன. லயத்துக் கலா­சாரம் இம்­மக்­களின் எழுச்­சிக்கு தடை­யாக உள்ள நிலையில் இவற்றில் இருந்து துரி­த­மாக இம்­மக்­களை எவ்­வாறு மீட்­டெ­டுக்­கலாம் என்­பது குறித்த திட்­டங்கள் மிகவும் அவ­சி­ய­மாகும். கடந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பெருந்­தோட்ட வீட­மைப்பு திட்­டங்கள் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. சம­கா­லத்­திலும் இந்த நிலை­மையே தொடர்­கின்­றது. இந்­நி­லையைக் கருத்­தில்­கொண்டு முறை­யான திட்­ட­வ­ரைபு ஒன்றின் ஊடாக எவ்­வாறு வீட­மைப்­பினை துரி­தப்­ப­டுத்­தலாம் என்­பது குறித்து ஆலோ­சிக்க வேண்டும். தோட்­டப்­புற சுகா­தார, மருத்­துவ விருத்­திக்கு ஆற்­ற­வேண்­டிய பணிகள் குறித்த முறை­யான திட்­டங்­க­ளையும் அர­சி­யல்­வா­திகள் தயா­ரிக்க வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். 

இருப்பு

பெருந்­தோட்ட தேயிலைத் தொழில்துறை இன்று மெது மெது­வாக வலு­வி­ழக்­கின்­றது. கம்­ப­னி­யி­னரின் அடக்­கு­முறை, ஊதிய பற்­றாக்­குறை, தொழில் துறையில் நவீ­னத்­துவம் உள்­ளீர்க்­கப்­ப­டாமை உள்­ளிட்ட பல கார­ணிகள் இதற்கு ஏது­வா­கின்­றன. தோட்டத்

 தொழில்து­றையில் ஈடு­படும் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை வேக­மாக குறை­வ­டைந்து வரு­கின்­றது. 1981 இல் நான்கு இலட்­சத்து 97 ஆயி­ரத்து 995 தொழி­லா­ளர்கள் தோட்­டங்­களில் பதிவு பெற்­றி­ருந்­தனர். இது 2009 ஆம் ஆண்டில் இரண்டு இலட்­சத்து 42 ஆயி­ரத்து 666 ஆக குறை­வ­டைந்­தி­ருந்­தது. இன்று இந்­நிலை மிகவும் மோச­ம­டைந்­துள்­ளது. பெருந்­தோட்­டங்கள் திட்­ட­மிட்டு அழிக்­கப்­ப­டு­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அபி­வி­ருத்தித் திட்டம், குடி­யேற்றத் திட்டம் என்னும் போர்­வையில் தோட்­டப்­புற நிலங்கள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. பல தோட்­டங்கள் இவை­களை காரணம் காட்டி மூடப்­பட்­டி­ருக்­கின்­றன. 1988 இல் கண்­டியில் 2500 ஏக்­கரும், மாத்­த­ளையில் 2600 ஏக்­கரும் நுவ­ரெ­லி­யாவில் 2000  ஏக்­கரும் பது­ளையில் 2125 ஏக்­கரும், இரத்­தி­ன­பு­ரியில் 5485 ஏக்­கரும் திட்­ட­மிட்ட சிங்­கள இனக்­கு­டி­யேற்­றத்­துக்­காக ஒதுக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஏ.சி.ஆர்.ஜோன் தெரி­விக்­கின்றார். மேலும் இந்த நிலங்கள் மலை­யகத் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. மாறாக வாழ்­வி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர் என்­ப­தையும் இவர் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22