அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாயலத்தில் தான் பராமரித்து வந்த புலிகளால் தாக்கப்பட்டு பெண் வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கலிபோர்னியாவின் மூர்பார்க்கில் அமைந்துள்ள வனவிலங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (WEC) இன் நிறுவனர் பாட்டி பெர்ரி, இவர் நன் கொடையாளர்களுக்காக சிறப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தார். 

இதன்போதே அவர் பரிமரித்து வந்த இரு புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் அங்கிருந்த தீயணைப்பு பிரிவினர் அவரை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாட்டி பெர்ரி குறித்த புலிகளை சிறுவயது முதல் பரிமாரித்து வந்துள்ளதுடன், வரிக் குதிரைகள், பறவைகள் மற்றும் சிறுத்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.