அனர்த்தங்களும் ஆற்றுப்படுதல்களும்

08 Dec, 2019 | 03:51 PM
image

பாக்கியராஜா மோகனதாஸ்

அனர்த்­தமும் அழி­வு­களும் ஒரு கணப்­பொ­ழுதில் இயற்­கை­யா­கவும் செயற்­கை­யா­கவும் நிகழ்ந்து உயி­ரா­பத்­துக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அனர்த்­தங்­களால் ஏற்­படும் உயி­ர­ழி­வு­களும் தாக்­கங்­களும் அதன் பிர­தி­ப­லிப்­பு­களால் உரு­வாகும் விளை­வு­களும் சமூ­கத்தில் நீண்ட நாட்­க­ளுக்கு நிலைத்­தி­ருக்கின்­றன. அனர்த்­தத்­துக்கு ஒரு செக்­க­னுக்கு முன்­ன­ரான செவி­யேறல் செய்­தி­களும் அதன் போதான நேர­டிக்­காட்சி விளை­வு­களும் அனர்த்­தத்­துக்கு பின்­ன­ரான உருக்­கு­லைந்த காட்சி விளை­வுகள் என்­பன ஒரு சரா­சரி மனி­தனை பெரும் மன அவஸ்­தைக்­குள்­ளாக்­கு­கின்­றது.

சுனாமி, சூறா­வளி, சுழல்­காற்று, மழை, வெள்ளம், மண்­ச­ரிவு, மண்­மேடு சரிவு, வரட்சி, பனிப்­பொ­ழிவு, பூகம்பம், போர், பயங்­கர குண்­டு­வெ­டிப்பு, தீவிர­வாத தாக்­குதல், மிதி­வெடி, துப்­பாக்­கிச்­சூடு ஆகி­ய­வற்றால் ஏற்­படும் உளத்­தாக்­கங்கள் மனித இனத்­திற்கு நடத்தை ரீதி­யாக எதிர்­ம­றைத்­தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­கின்­றது. பேர­ழி­வுகள் எவ­ரையும் விட்டு வைப்­ப­தில்லை. பேர­ழிவு ஏற்­ப­டும்­போது மக்கள் நியா­ய­மாக யோசிப்­பதோ சிந்­திப்­பதோ கிடை­யாது. அதற்­கான விநா­டியும் போதா­ம­லி­ருக்கும். ஆனால் எதிர்­வரும் கால பேர­ழி­வு­களின் போது உயிர் தப்­பு­வ­தற்கு அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு ஒவ்­வொ­ரு­வரும் ஆயத்­த­மாக இருப்­ப­தற்கு முறை­யான முறை­மை­களை கடைப்­பி­டிக்க வேண்டும்.

பேர­ழிவு சம்­பந்­த­மாக அர­சாங்கம் மற்றும் ஊட­கங்­களில் மாத்­திரம் சொல்­வதை கவ­னத்­தி­லெ­டுக்க வேண்டும். இயற்­கை­யான பேர­ழி­வுகள் இன்னும் இரு மணி, அரை மணி நேரங்­களில் ஏற்­ப­டப்­போ­வதை அறிந்து உங்­க­ளுக்கும் உங்கள் அன்­பா­ன­வர்­க­ளுக்கும் ஆபத்து வரும் என்­பதை மன­த­ளவில் ஏற்­றுக்­கொள்­வ­துடன், பேர­ழி­வுக்கு முன்னர் ஆயத்­த­மாக இருக்க மனதை தயார்ப்­ப­டுத்த வேண்டும். இல்­லை­யெனில் அனர்த்­தத்­தின்­போது உயி­ரா­பத்­தி­லி­ருந்து விடு­ப­டு­வ­தென்­பது கஷ்­ட­ மா­கி­விடும்.

கரை­யோரம், மத்­தி­ய­ம­லை­நாடு, நகர்ப்­புறம், ஒதுக்­குப்­புறம் என ஒவ்­வொரு பகு­தி­யிலும் என்­னென்ன பேர­ழி­வுகள் ஏற்­ப­டலாம் என்­பதை தெரிந்­து­வைத்­துக்­கொள்ள வேண்டும். கரை­யோ­ரங்­களில் மண்­ச­ரிவின் தாக்கம் குறை­வாக இருப்­ப­துடன் மண்­ண­ரிப்­பினால் கடல் ஊருக்குள் ஊடு­ரு­வு­வ­தையும்  தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். பேர­ழி­வுக்­கேற்ப பாது­காப்­பான இடங்கள் எங்கே இருக்­கின்­றன, எவ்­வாறு செல்­லலாம் என்­ப­தையும் அறிந்து வைத்­தி­ருக்க வேண்டும்.

உங்கள் வீடு கட்­டப்­பட்­டி­ருக்கும் விதமும் அது அமைந்­தி­ருக்கும் இடமும் பாது­காப்­பா­ன­தாக இருக்­கின்­றதா என்று நீங்­களே   உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். நீர் நிரம்பி வழியும், நீரினால் மூழ்கும் அல்­லது குளம் இருந்த இடத்தில் மண்ணை எவ்­வ­ள­வுதான் இட்டு கட்­டி­டங்கள், தொழிற்­சா­லை கள், வைத்­தி­ய­சா­லைகள் கட்­டி­னாலும் மழை வெள்ள காலங்­களில் மூழ்கும் நிலைக்கு உள்­ளாகும் என்­பதை அறிந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­ப­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். குளம், ஆறு இருந்த இடத்தில் மக்கள் குடி­யி­ருப்பு வீட்­டுத்­திட்­டங்கள், அரச நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றை அமைக்­கும்­போது மண்ணின் தன்­மை­யினை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். கட்­டி­டங்கள் அர­சினால் வந்­த­தென்­ப­தற்­காக உயிர்­களை காப்­பாற்­றக்­கூ­டிய வைத்­தி­ய­சா­லையை குளம் மற்றும் வயல்­காணி அமைந்­தி­ருந்த இடத்தில் கட்­ட­மு­டி­யாது. அவ்­வாறு நிர்­மா­ணிக்­கப்­பட்டால் கட்­டி­டத்தில் வெடிப்­புகள் ஏற்­ப­டவோ, இடிந்து விழவோ வெள்­ளத்­தினால் நீர் நிரம்பி வழியும் நிலைக்கோ உள்­ளாக்­கப்­படும். இதனால் வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்சை பெற்று உயிரை காப்­பாற்ற வந்­த­வர்­களின் உயிர் பறி­போகும் நிலை ஏற்­ப­டலாம் என்­பதை மனிதம் உள்­ள­வர்கள் அறி­ய­வேண்டும். இவ்­வா­றான கட்­டிட நிர்­மா­ணிப்­புகள் இலங்கை முழு­வ­திலும் இடம்­பெற்­று வரு­கின்­றன.  மண்ணின் தன்­மை­ய­றிந்தும் கட்­டி­டங்கள் கட்­டப்­பட்டு மீண்டும் கட்­டி­டங்கள் இடிக்­கப்­பட்ட நிலை பல்­வேறு இடங்­க­ளிலும் ஏற்­பட்­டுள்­ளது,  

இதனால் பொது­மக்கள் வரியில் வரு­கின்ற அரச நிதி வீண்­வி­ர­ய­மா­கி­றது. இவ்­வா­றான நிலை­மை­களைக் குறித்த அமைச்­சர்கள், அமைச்சின் செய­லா­ளர்கள் மற்றும் அலு­வ­லர்கள் கவ­னத்­தி­லெ­டுத்து இடம் அறிந்து கட்­டி­டங்­களை அமைப்­பது சாலச் சிறந்­தது.   

வீட்­டினுள் அரச நிறு­வ­னங்­களுள் தீ விபத்து ஏற்­ப­டக்­கூ­டிய பொருட்­க­ளை­ய­கற்ற வேண்டும். புகையை கண்­ட­றியும் கருவி ஒவ்­வொரு அரச, அரச சார்­பற்ற மற்றும் வீடுகள் என ஒவ்­வொரு இடங்­க­ளிலும் பொருத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அதன் பேட்­ட­ரி­களை வரு­டத்­துக்கு  ஒரு தட­வையோ, பல தட­வையோ மாற்றி முறை­யாக அதை பரா­ம­ரிக்க வேண்டும். அனர்த்­தங்­க­ளின்­போது அவ­ச­ரத்­துக்குத் தேவை­யான பொருள்­களை ஆயத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்டும். மின்­சார சாத­னங்கள், மின்­னேற்­றப்­பட்ட மின் உப­க­ர­ணங்கள், தண்ணீர், கைய­டக்கத் தொலை­பேசி, போக்­கு­வ­ரத்து வசதி ஆகி­ய­வற்றை தயா­ராக வைத்­தி­ருப்­ப­துடன் வாக­னத்தில் முழு­மை­யாக எரி­பொ­ரு­ளையும் நிரப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் உணவு, தண்ணீர், முத­லு­த­விப்­பெட்டி ஆகி­யவை இருக்­கும்­படி பார்த்­துக்­கொள்ள வேண்டும். உங்­க­ளுக்குத் தேவை­யா­னதை நீங்­களே வைத்­தி­ருக்­கின்­றீர்­களா என்று பல தடவை பார்த்துக் கொள்­ளுங்கள். உங்­க­ளுக்கு பக்­கத்­திலும் தூரத்­திலும் உள்ள உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்­களின் கைய­டக்கத் தொலை­பே­சியின் இலக்­கத்தை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

இடி, மின்னல், மழை வெள்­ளத்­தின்­போது வீடு­களில் மற்றும் நிறு­வ­னங்­களில் மின்­சாரம் தடைப்­ப­டலாம். அதற்­கேற்ற வகையில் மின்­சா­ரத்­தைச் சேமித்து வைக்­கக்­கூ­டிய, மின்­னேற்­றப்­பட்ட விளக்­கு­களை, பேட்­டரி, சூரி­யப்­ப­டலம் மூலம் இயங்­கக்­கூ­டிய மின் விளக்­கு­களை ஆயத்­தப் ­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். உங்கள் வீடு மற்றும் நிறு­வ­னங்­களில் தீ முழு­வதும் பர­விய பேர­னர்த்­தத்­தின்­போது உங்கள் கட்­டி­டத்­தி­லி­ருந்து வெளியே எவ்­வ­ழியால் எங்கே இல­கு­வாக செல்­லலாம் என்­பதை ஞாபக நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் குறிப்­பிட்ட ஓர் இடத்தில் வந்து சங்­க­மிப்­ப­தாக இருத்தல் வேண்டும். தீ பரவ ஆரம்­பித்­ததும் அவ்­வி­டத்தை விட்டு உடனே வெளியில் போக­வேண்டும். விவே­க­மாக தரையில் நகர்ந்தோ, நடந்தோ போகும்­போது யாரா­வது தடுக்கி விழுந்தால் அவரை அவ்­வி­டத்தில் விட்­டுச்­செல்­லாமல் தூக்­கிக்­கொண்டு நடந்­து­கொண்டே இருக்­க­வேண்டும். எம்மால் நிச்­ச­ய­மாக தப்­பிக்க முடியும் என்று மற்ற­வர்­க­ளுக்கு தட்­டிக்­கொ­டுத்து ஒவ்­வொ­ரு­வ­ரையும் விரைந்து செல்ல ஊக்­கப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக நாம்   இருக்க வேண்டும்.

பேர­னர்த்­தங்­க­ளின்­போது வய­தா­ன­வர்­க­ளுக்கும் உடம்பு முடி­யா­த­வர்­க­ளுக்கும் குழந்­தை­க­ளுக்கும் கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கும் விசேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கும் ஆபத்தின் போதும், உயிர்­விடும் நிலை­யிலும் கூட உத­வு­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்­ப­டும்­போது தரையில் படுத்­துக்­கொண்டு அப்­ப­டியே படுத்­த­வாறு நகர்ந்து விரை­வாக விவே­க­மாக வெளியே செல்ல முயற்­சிக்க வேண்டும். புகை சூழ்ந்­தி­ருப்­ப­தனால் அந்த இடத்தை பார்ப்­பது மிக கஷ்­ட­மாக இருக்­கலாம். தீ விபத்­தின்­போது புகை­யை சுவா­சிப்­ப­த­னா­லேயே நிறைய பேர் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றார்கள். பாரிய தீ அனர்த்தம் ஏற்­படும் போது எக்­கா­ரணம் கொண்டும் உங்கள் உட­மை­களை, பொருள்­களை எடுத்­துக்­கொண்டு செல்­வதை முற்­றாகத் தவி­ருங்கள். ஒரு நொடி தாம­தித்தால் உயிரை இழக்க வேண்டி ஏற்­ப­டலாம் என்­பதை பேர­னர்த்­தங்­க­ளின்­போது நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

பூமி­ய­திர்ச்­சியின் போது வீட்­டி­லுள்ள உறு­தி­யான மேசைக்கு கீழேயோ சுவ­ருக்கு பக்­கத்­தி­லேயோ மறைந்­து­கொள்ள வேண்டும். பூமி அதிர்ச்­சிக்குப் பிறகு சிறு சிறு அதிர்­வுகள் ஏற்­படும் என்­பதை எதிர்­பார்த்­தி­ருங்கள். எவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக கட்­டி­டத்தை விட்டு வெளியே போக முடி­யுமோ அவ்­வ­ளவு சீக்­கிரம் வெளி­யே­று­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். மீட்பு வேலையில் ஈடு­ப­டுப­வர்கள் அவர்­க­ளுக்­கு­ரிய முறை­யான சட்­ட­விதி முறை­க­ளுடன் அவ்­வி­டத்­துக்கு வரு­வ­தற்கு பல மணி­நேரம் ஆகலாம். ஆதலால் உங்­களால் முடிந்­த­ளவு நீங்கள் வெளி­யே­று­வ­துடன் தங்கள் உயிரை கவ­னத்தில் எடுத்து ஏனை­யோ­ரையும் விவே­க­மாக காப்­பாற்­று­ப­வர்­க­ளாக இருக்­க­வேண்டும்.

சுனாமி பேர­லை­யினால் சுனாமி தாக்­கும்­போது கடல் அலைகள் கரையைத் தாண்டி வேக­மாக வரும்­போது உடனே உய­ர­மான பகு­திக்குச் செல்­ல­வேண்டும். இன்னும் மேன்­மேலும் பெரிய பெரிய அலைகள் வரும் என்­ப­தையும் எதிர்­பார்க்க வேண்டும். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஊடகத் தொடர்­பா­ட­லுடன் இருப்­ப­தற்­கேற்ற வகையில் பேட்­ட­றியில் இயங்­கக்­கூ­டிய வானொ­லி­களை, கைய­டக்கத் தொலை­பே­சி­யி­லுள்ள நம்­ப­க­மான ஊடக வெளி­யீ­டு­களை, அறிக்­கை­களை அறி­வது சிறப்­பாக இருக்கும்.

சூறா­வளி தாக்­கும்­போது எம்மை பாது­காக்­கக்­கூ­டிய இருப்­பி­டங்கள், பெரும்­கோட்­டைகள், மறைந்­து­கொள்­வ­தற்­கென்று நீங்கள் கட்டி வைத்­தி­ருக்கும் இடங்கள், குகைகள் ஆகி­ய­வற்­றுக்கு உட­ன­டி­யாக விரைந்து செல்ல வேண்டும். மழை வெள்ளம் வரும்­போது தண்ணீர் புகுந்த கட்­டி­டத்தை விட்டு வெளியே வந்­து­             வி­டுங்கள். தண்­ணீரில் நடப்­ப­தையோ வாக­னம் ஒட்டுவ­தையோ முற்­று­மு­ழு­தாக தவி­ருங்கள். ஏனென்றால் அந்த நீரில் கழி­வுநீர் கலந்­தி­ருக்­கலாம், சில ஆபத்­து­களும் மறைந்­தி­ருக்­கலாம். அதா­வது கழி­வுப்­பொ­ருள்கள் இருக்­கலாம். பாதாள சாக்­கடை திறந்து கிடக்­கலாம். மின்­சார கம்­பிகள் அறுந்து விழுந்­தி­ருக்­கலாம். ஆகவே வெள்ளம் வரும்முன் அணை கட்­டு­வதைப் போல வழ­மை­யாக வெள்ளம் வரும் இடம் என்று தெரிந்தால் சில வேளை­களில் ஏற்­க­னவே வராத இடத்­திலும் வெள்ளம் வரலாம் என்­பதை அறிந்து வர­வி­ருக்கும் வெள்­ளத்தில் அடித்­துச்­செல்­லப்­ப­டாத வகையில் அவ்­வி­டத்தை விட்டு நகர்­வது சாலப்­பொ­ருத்­த­மாக இருக்கும்.

வீதியில், வெளியில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் கரை­பு­ரண்டால் அது ஒரு காரையோ வாக­னத்­தையோ அடித்து இழுத்துச் செல்லும். வெள்­ளத்­தின்­போது கரை புரண்டு ஓடும் தண்­ணீரில் வாக­னத்தை ஓட்­டிக்­கொண்டு சென்­ற­த­னா­லேயே நிறைய பேர் உயிர் இழந்திருப்பதாக  பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அனர்த்த முகா­மைத்­துவ, வளி­மண்­டலத் திணைக்­கள அலு­வ­லர்கள், மீட்பு படை­யினர், கட்­டிட ஆராய்ச்சி திணைக்­க­ளத்­தினர், அனர்த்­தங்­க­ளுக்கு பொறுப்­பான அதி­கா­ரிகள் ஆகியோர் உரிய இடத்தை விட்டு வெளி­யேற சொன்னால் உடனே இருக்கும் இடத்­தி­லி­ருந்து வெளி­யே­று­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கே இருக்­கின்­றீர்கள் என்­பதை உங்கள் உற­வி­னர்கள், நண்­பர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­துங்கள். இல்­லை­யென்றால் உங்­களைத் தேடச் சென்­ற­வர்கள் ஆபத்தில் சிக்­கிக்­கொள்ளும் நிலை உரு­வாகும். எனவே ஒவ்­வொரு சிறு சிறு விட­யங்­க­ளையும் கணப்­பொ­ழுதில் சிந்­தித்து தலை­மைத்­துவ முகா­மைத்­துவம் செய்­ப­வர்­க­ளாக ஒவ்­வொ­ரு­வரும் இருக்க வேண்டும். அனர்த்­தங்­களின் போது கைய­டக்கத் தொலை­பே­சியில் பேசு­வதை விடுத்து குறுஞ்­செய்திச் சேவை­யினை பரி­மா­றிக்­கொள்­ளுங்கள். இல்­லை­யெனில் இடி மின்னல் மின்­சா­ரத்­தாக்கம் போன்ற பல்­வேறு தாக்­கங்­க­ளுக்கு உட்­பட நேரி­டலாம்.

விஷ வாயு தாக்­கும்­போதோ வைரஸ் மற்றும் பக்­டீ­ரியா (BACTERIA) பர­வும்­போதோ அணுமின் விபத்து ஏற்­ப­டும்­போதோ வீட்டை விட்டு, உரிய இருப்­பி­டத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களின் போது ஏசியை(AC) இயங்­காமல் வைப்­ப­துடன் கத­வு­க­ளையும் யன்­னல்­க­ளையும் மூடி வைக்க வேண்டும். அணுமின் விபத்து ஏற்­ப­டும்­போது ஆபத்­தான கதிர்­வீச்சு தாக்­காமல் இருக்க கட்­டி­டத்தின் தாழ்­வான பகு­திக்கு செல்ல ஆயத்­த­மா­யி­ருத்தல் வேண்டும். தொலைக்­காட்சி மற்றும் வானொ­லியில் உட­னுக்­குடன் செய்­தி­க­ளை­ய­றிய வேண்டும். ஆபத்து நீங்­கி­விட்­டது என்று அதி­கா­ரிகள் சொல்லும் வரை­யிலும் அவ்­வி­டத்தை விட்டு நக­ராமல் இருக்க வேண்டும்.

மனி­தர்கள் நட­மா­டாத தனி­மை­யான சூழ­லுக்கு செல்­வதை தவிர்ப்­பதன் மூலம் மிதி­வெடி போன்­ற­வற்­றி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­ளலாம். உங்­க­ளுக்குத் தெரி­யாத பற்­றைக்­கா­டுகள் நிறைந்த புதிய இடங்­க­ளுக்கு செல்­லும்­போது கவ­ன­மாக செயற்­ப­ட­வேண்டும். மிதி­வெடி விழிப்­பு­ணர்வு பல­கைகள், பாது­காப்­பற்ற இடம் என்ற பதா­தைகள் பொருத்­தப்­பட்­டுள்­ளதா என நன்கு அவ­த­ானித்து அதன் பின்னர் அவ்­வி­டத்தில் நட­மா­டு­வதை சிந்­திக்­க­வேண்டும். அனர்த்­தங்கள் நிகழ்­வ­தற்கு இரு மணி நேரத்­துக்கு முன்னர் அவ­சர நிலை­யினை நிர்­வ­கிக்கும் துறை­யினர் அர­சுக்கும் ஊட­கங்­க­ளுக்கும் அறி­விக்க, ஊட­கங்கள் அந்த நிலையை ஊட­கங்கள் வாயி­லாக அறிக்கை வெளி­யிடுவர். அந்த  அறிக்­கைக்­கேற்ப ஒவ்­வொ­ரு­வரும் செயற்­ப­ட­வேண்டும்.

அவ­ச­ரத்­துக்குத் தேவை­யான பொருள்­களைச் சேமித்து வைக்­கும்­ப­டியும் அவற்றை ஒவ்­வொரு வரு­டமும் முறை­யாக பார்க்­கும்­படி பேர­ழிவை நிர்­வ­கிக்கும் அமைப்­புகள், பத்­தி­ரிகை, தொலைக்­காட்சி மற்றும் வானொலி, இணை­யத்­தளம் ஊடாக அறி­விப்­பதை கவ­னத்­தி­லெ­டுத்து அதற்­கேற்ப செயற்­பட வேண்டும். ஒரு நபர் குறைந்­தது பதி­னொரு லீற்றர் தண்­ணீரை வைத்­துக்­கொள்­வ­துடன் மூன்று நாட்­க­ளுக்குத் தேவை­யான சமைக்­காமல் அப்­ப­டியே சாப்­பி­டக்­கூ­டிய கெட்­டுப்­போ­காத உண­வு­களை சேமித்­துக்­கொண்டு செல்­ல­வேண்டும். உங்கள் இடத்­துக்கும் சூழ்­ நி­லைக்­கு­மேற்ப அடிப்­படை அத்­தி­யா­வ­சிய பொருட்­களை ஆயத்­தப்­ப­டுத்திக்கொண்டு செல்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். போர்வை, கத­க­தப்­பான உடை, நல்ல பாதணி, டார்ச் லைட், வானொலி, பேற்­றரி, முத­லு­தவிப் பெட்டி, மாஸ்க், மருந்து, மருந்­து­சீட்டு மற்ற முக்­கிய ஆவ­ணங்கள், அவ­சர தொடர்­புகள், கிறடிட் கார்ட்கள் மற்றும் பணம் ஆகி­ய­வற்றை கொண்­டு­செல்ல ஆயத்­த­மா­யி­ருக்க வேண்டும்.

பேர­ழி­வுக்கு பின்னர் முகாமில் இருப்­ப­தற்கு பதி­லாக இயன்­ற­ளவு உற­வி­னர்­க­ளு­டனும் நண்­பர்­க­ளு­டனும் இருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்­த­மாக வையுங்கள். குப்­பை­களை சுத்தம் செய்ய உங்கள் பொருள்­களை மட்­டுமே பயன்­ப­டுத்­துங்கள். முடிந்தால் கையுறை, நல்ல பாதணி, கன­மான தொப்பி, மாஸ்க் போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­துங்கள்.

மின்­சார கம்­பி­களும் நெருப்பு தணல்­களும் குப்­பை­களில் இருக்­கலாம். அதனால் கவ­ன­மாக சுத்தம் செய்ய வேண்டும்.

அர­சாங்­கமும் மீட்புக் குழுவும் பொது­மக்­களை பேர­ழி­வி­லி­ருந்து பாது­காப்­ப­தையே கவனம் செலுத்­து­வார்கள். இழந்த பொருட்­க­ளை­யெல்லாம் திருப்பிக் கொடுப்­ப­தற்­கல்ல. மானத்­துடன் உயிர்­வாழ்­வ­தற்கு அடிப்­படை தேவை­க­ளான உணவு, குடிநீர், உடை, உறையுள் ஆகி­யவை தேவை­யென்­பதை மாத்­தி­ரமே மனதில் கொள்ள வேண்டும். பேர­னர்த்த அழி­வினால் ஏற்­பட்ட அதிர்ச்­சிக்குப் பிறகு கவலை, மனச்­சோர்வு, மன­நி­லையில் மாற்றம் போன்­ற­வற்றால் நீங்­களோ உங்கள் குடும்ப உற­வி­னர்­களோ உங்கள் குழந்­தை­களோ நண்­பர்­களோ பாதிக்­கப்­ப­டலாம். நீங்கள் அமை­தி­யா­கவும் நம்­பிக்­கை­யா­கவும் இருக்­கின்­றீர்கள் என்­பதை உங்கள் பிள்­ளைகள் பார்க்க வேண்டும். பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலை பாடத்தை சொல்­லிக்­கொ­டுப்­ப­துடன் அவர்­க­ளோடு விளை­யாட வேண்டும், தவ­றாமல் குடும்ப வழி­பாடு செய்­வ­துடன், பேர­ழிவு சம்­ப­வங்­களை யோசித்­துக்­கொண்­டி­ருக்­காமல் விரக்­தி­யையும் வெறுப்­பையும் உற­வி­னர்­க­ளி­டமும் குழந்­தை­க­ளிடம் காட்­டாது இருக்க வேண்டும். ஏனை­ய­வர்கள் உத­வும்­போது உதா­சீனம் செய்­யாமல் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். பேர­ழி­வுக்கு பின்­ன­ரான நிலையில் உங்கள் மீது அக்­க­றை­யாக இருப்­ப­வர்­க­ளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அனர்த்­தங்­களால் ஏற்­படும் உள­தாக்­கங்­களும் அனர்த்­தங்­களைத் தொடர்ந்து நடை­பெறும் களவு, கொள்ளை, வன்­பு­ணர்ச்சி போன்­ற­வற்றால் ஏற்­படும் நெருக்­கீ­டுகள் தொடர் உளத்­தாக்­கங்­க­ளுக்கு கார­ண­மாக அமை­கின்­றன. அனர்த்­தங்­களால் ஏற்­படும் உள­நெ­ருக்­கீ­டுகள் ஒருங்­கி­ணைந்து சமூ­க­மட்ட நெருக்­கடி­க­ளாக பரி­ண­மிக்­கின்­றன. இவற்றால் ஏற்­பட்ட மன­வ­டுக்­களை ஆற்­றுப்­ப­டுத்தல் என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அவை நீண்­டநாள் நிலைத்­தி­ருப்­புக்­கொண்­ட­வை­யாக விளங்­கு­கின்­றன. இவ்­வாறு அனர்த்­தத்தின் போதான உளக்­கோ­ளா­று­களை (POST - TRAUMATIC STRESS DISORDER) என அழைக்­கின்­றனர். அனர்த்­தங்­களால் ஏற்­படும் உளப்­பா­திப்­புகள் நேர­டி­யாக வெளிப்­படு தன்­மை­யற்­ற­வை­யா­கவும் உள்­ளார்ந்த உள­வ­டுக்­க­ளா­கவும் அமைந்து விடு­கின்­றன. இவ்வாறு ஏற்­படும் மன அழுத்­தங்கள் மானிட வெளிப்­பா­டு­க­ளுக்கு தடை­யா­கவும் அமை­கின்­றன. அவை தனி மனி­த­னது மேம்­பாட்டில் மாத்­தி­ர­மின்றி சமூக, பொரு­ளா­தார பண்­பாட்டு நிலை­க­ளிலும் நீண்ட நாள் நிலைத்­தி­ருந்து எதிர்­மறைத் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­கின்­றன. பல பெற்­றோர்­க­ளிடம் நிகழ்ந்த உண்­மை­யான சம்­ப­வத்தை கூறிய பிறகும் தனது உயி­ர­ணுக்கள் இறக்­க­வில்லை வரு­வார்கள் என்ற ஆதங்­கத்­தோடு பலர் இருந்து வரு­கின்­றனர்.

 தனது கணவன், மகன், அண்ணன், அக்கா, தம்பி ஆகியோர் இறக்­க­வில்­லை­யென்ற எண்­ணத்தில் பலர் இன்றும் கூட வாழ்ந்து வரு­கின்­றனர். உயி­ருடன் இல்­லா­த­வர்­களை உயி­ருடன் இருக்­கி­றார்கள் என்று பலர் வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­மை­க­ளையும் அனர்த்­தங்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பெற்ற தாயின் முன்னே இடம்­பெற்ற தாங்­க­மு­டி­யாத வன்­பு­ணர்வு போன்ற சம்­ப­வங்கள் ஆற்­றுப்­ப­டுத்த தகாத உள­வ­டுக்­க­ளாக அமை­கின்­றன. இவை தவிர சம்­ப­வங்­களை கேள்­விப்­பட்­ட­வர்கள், பிரே­தங்­களை கண்­ணுற்­ற­வர்கள், உருக்­கு­லைந்து அழு­கிய நிலையில் காணப்­பட்ட சட­லங்­களை கண்­ணுற்­ற­வர்கள், மீள்­கட்­டு­மான நட­வ­டிக்­கை­களால் புறக்­க­ணிக்­கப்­பட்டோர், அச்­சு­றுத்­தப்­பட்டோர் என அனர்த்­தங்­க­ளுக்கு உட்­ப­டா­தோரும் உள­ நெ­ருக்­கீ­டு­க­ளுக்கு உட்­ப­டு­கின்­றனர். இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­கால சூழலில் பெரும்­பான்மை படை­யி­னரின் ஆக்­கி­ர­மிப்பு அட்­டூ­ழி­யத்­தினால் எம் இளம் பெண்கள் பலர் வன்­பு­ணர்ச்­சிக்­குள்­ளாக்­கப்­பட்­டனர் என்­பதை யாவ­ரு­ம­றிவர். சவால்­களை எதிர்­கொள்­ளும்­போதோ அல்­லது சவால்­களை எதிர்­கொள்ள முடி­யாதோ என்று யோசிக்­கும்­போதோ உளத்­தாக்கம் ஏற்­ப­டு­கின்­றது. இத்தாக்­கங்கள் கார­ண­மாக ஒரு­வரின் மனதில் ஏற்­படும் பாதிப்­பினை மனதில் ஏற்­படும் காயங்­க­ளாகக் கருத முடியும். பல்­வே­று­பட்ட கார­ணிகள் நபர் ஒரு­வரில் உளத் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்த வல்­லன. இந்த உளத் தாக்­கத்தின் அளவு சிறி­தா­கவோ பாரி­ய­தா­கவோ அமை­யலாம். பொது­வாக எதிர்­பா­ராத சந்­தர்ப்­பங்­களில் சடு­தி­யாக ஏற்­படும் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்­தங்­களால் ஏற்­ப­டு­கின்ற உளத்­தாக்­கத்தின் அளவு பாரி­ய­தாக இருக்கும் அதே வேளை குறிப்­பி­டத்­தக்­க­ளவு நபர்கள் உளப் பாதிப்­புக்கு உட்­படக் கூடிய சாத்­தி­யமும் உள்­ளது.

அனர்த்­தங்கள் நிறை­வுற்ற போதிலும் உள­நெ­ருக்­கீ­டுகள் மற்­று­மொரு அனர்த்­தத்தின் பரி­மா­ணத்துக்கு கார­ண­மாக அமை­கின்­றன. இலங்­கையில் கடந்த 2004 இல் இடம்­பெற்ற சுனாமி அனர்த்­தத்தின் போது 30196 பேர் மர­ணத்தை தழு­வி­யுள்­ள­துடன் உளத்­தேற்­ற­மின்­மை­யால் ­பெ­ரு­ம­ள­வான தற்­கொ­லை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. அனர்த்­தங்­களின் போது சிறு­வர்­களும் பெண்­களும் கூடி­ய­ளவு உளநெருக்கீடுகளுக்கு உட்படுவதுடன் அனர்த்த தாக்கங்களைத் தொடர்ந்து நித்திரையில் திடுக்கிட்டு எழுவதும் வீறிட்டு அழுவதும் தூக்கத்தில் அலறுவதும் உணர்ச்சிவசப்படுவதும் அமைதியாகி ஒடுங்குவதும் கற்றலில் காழ்ப்புணர்வும் பாடசாலை செல்ல மறுப்பதும் சோம்பலாயிருப்பதும் வழமைக்கு மாறாக தூங்குவது ஆகியன மாணவர்களின் உளத்தேற்றமின்மையின் வெளிப்பாடுகள்.

போர்க்காலத்தில் எம் தமிழ் இனத்தவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. போரினால் சொந்த மண்ணில், மனையில் வாழாது பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த நாடுகளில் தங்கள் உறவினர்களைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பெரும்பான்மையினர் எமது தமிழ்ச் சமூகத்தை நுண்கடன், போதைப்பொருள், வாள்வெட்டு கலாசாரம் ஆகியவற்றிற்குள் திட்டமிட்டு உட்படுத்தி தமிழர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த முப்பது வருட காலமாக தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதனை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான கலாசாரங்களிலிருந்து எம் உறவினர்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கின்றது. ஒரு தனி நபரின் மீண்டெழுதல் அவர் எதிர்கொண்டுள்ள தாக்கத்தின் அளவு, அவரது தாங்குதிறன், அவருக்கு கிடைத்த உதவிகள், அவரது எதிர்பார்ப்புகள், பேரிடர் சார்ந்த அவர்களின் முன்னைய அனுபவங்கள் போன்ற பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. பெரும்பாலானோர் கிராம பாடசாலை மட்டத்திலான சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் தமது நாளாந்த நிலைக்கு மீளக் கூடியவர்கள். இன்னும் சிலருக்கு தொடர் உளவளத் துணை தேவைப்படும்போது மிகவும் குறைந்தளவானவருக்கு உளவியல் சிகிச்சைகளோ மருந்துச் சிகிச்சைகளோ அல்லது மேற்கூறிய இரண்டுமோ அவர்களின் மீண்டெழுதலை விரைவுபடுத்த தேவைப்படலாம்.

இன்றைய நவீன இயந்திர யுகத்தில் எமக்கு அருகிலிருப்பவர்களுடன் அளவளாவுவதற்கு காலம் போதாத நிலையில் இயந்திரம் போன்று இயங்கும் நாங்கள் ஒவ்வொருவரும் எமக்கு ஏற்படும் ஒவ்வொரு சவாலிலிருந்தும் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களிலிருந்தும் ஏனைய இதர அனர்த்த விபத்துகளிலி ருந்தும் நாம் ஒவ்வொருவரும் தன்னைத்தானே விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் மீண்டெழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11