(எம்.மனோசித்ரா)

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குகல்கள் தொடர்பில் விசாணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், ஆணைக்குழு நேர்மையாக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்திருந்த பேராயர் சாட்சியமளித்து வெளியேறியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.