படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி ; இருவர் மாயம்

08 Dec, 2019 | 01:30 PM
image

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. 

 இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இக்பால் இல்ஹாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை மீன்  பிடிப்பதற்காக ஐவர் சென்ற  படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காணாமல் போயுள்ளனர். ஏனைய இருவரும்  நீந்தி கரைச் சேர்ந்தநிலையில்  கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

 காணாமல் போனவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24