பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள 20 ஓவர்கள் கொண்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் சீகுகே பிரசன்ன மாத்திரம் தெரிவாகியுள்ளார்.

ஐந்தாவது பாகிஸ்தான் இருபதுக்கு - 20 பிரீமியர் லீக் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் மொத்தமாக இஸ்லாமபாத், கராச்சி, லாகூர், முல்தான், பெஷாவர் மற்றும் குவெட்டா உள்ளிட்ட  இடங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் 'Lahore Qalandars" அணியிலேயே சீகுகே பிரசன்ன விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான சீகுகே பிரசன்ன இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.