வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின்போது, வீதிநெரிசல் கட்டணத்தையும், பயணிகளிடமிருந்து அறவிடுவதற்கான நடவடிக்கை ஜூலை மாதம் முதல் மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.