இந்தியாவின், புது டெல்லியில் உள்ள தொழிற்சாலையி இடம்பெற்ற தீ விபத்து காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் ஆனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீணை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.