மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விவாகரம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரமானது 2019 ஆம் ஆண்டு மே மாதம் கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறைப்பு என்பவற்றுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி இலங்கையில் எரிபொருளில் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.