(வத்துகாமம் நிருபர்)

கண்டி - குருணாகல் பிரதான வீதியில் அலதெனிய பிரதேசத்தில் வீதி தாழ் இறங்கியுள்ளது.

இதன் காரணமாக குருணாகல் - கண்டி பிரதான வீதியில் ஒரு வழிப் போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரியான சுனேத்ரா வீரசூரிய கருத்து தெரிவிக்கையில் இவ் வீதியை கூடிய விரைவில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.