மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச்சென்ற 9 பேரில் கைது செய்யப்பட்ட 8பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம்  : குடிவரவு குடியகல்வு திணைக்களம்

Published By: R. Kalaichelvan

07 Dec, 2019 | 04:04 PM
image

(ஆர்.விதுஷா)

மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து தப்பிச்சென்ற 9 வெளிநாட்டவர்களில் 8 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று கூறியது.

மிரிஹான தடுப்பு முகாமில்  இருந்த கைதிகளில் 9 பேர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளமை குடிவரவு குடியகல்வு திணைக்கள  அதிகாரிகளினால் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டசோதனை நடவடிக்கையின் போது தெரிய வந்தது. இது தொடர்பில் மிரிஹான  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 8 பேர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும்  அவர்கள் அனைவரும் நைஜீரிய பிரஜைகள் எனவும் திணைக்களத்தின் சட்டக்கட்டுப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான கயான் மிலிந்த தெரிவித்தார். 

மிரிஹானை தடுப்பு முகாமில் கடன் அட்டை மோசடிகள் இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குடிவரவு  குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் ,பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த வியாழக்கிழமை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.   

இந்த சோதனையின் போது 75 கையடக்க தொலைபேசிகள்   5  மடிக்கணினி;மற்றும் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன  அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

அதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே அந்த முகாமில் இருந்தவர்களில் 9 பேர் தப்பிச்சென்றுள்ளமை தெரிய வந்தது.விசேட தேடுதல் நடவடிக்கைகளையடுத்து அவர்களில் 8 பேர் கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமையே கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் சேர்த்து இப்போது 111 பேர் அந்த முகாமில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்த கைதிகளில் அதிகளவில் நைஜீரிய பிரஜைகளே உள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த இவர்களில்  பெரும்பாலானோர் நிர்மாணத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர். தமது விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான  முறையில் நாட்டில் தங்கியிருந்த நிலையிலேயே , அவர்கள் கைது செய்யப்பட்டு மிரிஹானமுகாமில் அவர்கள்  தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:42:58
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23
news-image

வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:07:28
news-image

கொழும்பு வெள்ளவத்தையில் அமைதியான முறையில் மக்கள்...

2024-11-14 12:27:01