திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தில் இராணுவ வீரர்களின் உதவியுடன் அணைக்கட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு வாரமாகப் பெய்த அடை மழையினால் கந்தளாய் பிரதேசத்திலுள்ள சூரியபுர குளம் நீர் நிறைந்து அலைகள் ஏற்படுகின்ற போது நீர் வெளியேறுவதோடு குளத்தின் அணைக்கட்டின் ஒரு பகுதி உடைப்பெடுக்கும் அபாயத்தில் காணப்படுவதால் அப்பகுதியில் அமைந்துள்ள 22 ஆவது இராணுவ படையின் உதவியுடன் குளக்கட்டினை மண் இட்டு நிரப்பும் பணிகளை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வேலைத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக கந்தளாய் பிரதேச செயலாளர் விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டதோடு, இராணுவ வீரர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இம்மாவட்டத்தில் கந்தளாய், கோமரங்கடவெல,பதவிசிறிபுர,வான்எல போன்ற குளங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.