Published by R. Kalaichelvan on 2019-12-07 14:59:07
இலங்கையின் நீச்சல் நட்சத்திரமான மெத்தியூ அபேசிங்க இதுவரையில் 4 தங்கப்பதக்கங்ளை வென்று அசத்தியுள்ளார்.

இதில் 50 மீற்றர் ப்ரீஸ்டைலில் முதல் தங்கத்தை வென்ற மெத்தியூ, 200 மீற்றர் ப்ரீஸ்டைல் பிரிவில் இரண்டாவது தங்கத்தை வென்றார். இவர் இதற்கு முன்னர் 50 மீற்றர் நீச்சலில் வைத்திருந்த தனது 22.93 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறியடித்து, 22.16 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து தங்கம் வென்றிருந்தார்.

அதன்பிறகு நடைப்பெற்ற 100 மீற்றர் பட்டர்பளை அணிப்பிரிவில் தங்கம் வென்று மூன்றாவது பதக்கத்தை வெல்ல, நான்காவது தங்கப்பதக்கத்தை 4X100 அஞ்சலோடத்தில் வென்றெடுததமை குறிப்பிடத்தக்கது.

தடகளத்தில் நேற்றும் தங்கங்கள்
800 மீற்றர ஓட்டப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிலும் இலங்கை அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. முதலாவது நடைபெற்ற பெண்களுக்கான 800 மிற்றர் ஓட்டத்தில் டில்ஷி மஹேஷா 2.06 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப்பதக்கத்திற்கு சொந்தக்காரியாக, வெள்ளியை வென்றெத்து துஷாரி 2.08 செக்கன்களில் ஓடிமுடித்தார்.

அதேபோல ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இந்துனில் மதூஷ தங்கம் வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 1.50 செக்கன்களில் ஓடி முடித்தார்.
பெண்களுக்கான 42 கிலோ மீற்றர் மரத்தன் போட்டியில் இருனி கேஷாரா அபாரமாக ஓடி 2 மணித்தியலயங்கள் 41 நிமிடங்கள் 24 செக்கன்களில் பந்தயத் தூரத்தை நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் நதீஷ டில்ஷான 55.02 மீற்றர் தூரம் ஈட்டியை எறிய அவருக்கு தங்கப்பதக்கம் சொந்தமானது. இதில் வெள்ளியையும் இலங்கை வீரர் நதீகா லக்மாலி வென்றார். இவர் 54.41 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
4X400 இல் 2 தங்கம்
4X400 ஓட்டப் பெர்டடியில் இருபாலாரிலும் இலங்கை தங்கப்பதக்கங்களை வென்றது. முதலில் நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 போட்டியில் இலங்கை சார்பாக பங்கேற்ற அருண தர்ஷன, ரஜித நிரஞ்ச, செனீர மற்றும் லக்மால் பிரியந்த ஆகியோர் 3.08 செக்கன்களில் ஓடி முடித்து தங்கத்தை தட்டிச் சென்றனர்.
இரண்டாவதாக கோலை மாற்றும் போது சற்று நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ள, இலங்கை தங்கத்தை தவறவிடும் என்பது போலதான் இருந்தது. அனாலும் கடைசி சுற்றில் வேகமெடுத்த லக்மால் தங்கத்தை வென்று கொடுத்தார்.
அதேபோல பெண்களுக்கான 4X400 மீற்றர் ஓட்டத்தில் முதல் இரண்டு சுற்றுக்களிலும் இலங்கை அணி பின்தங்கியிருந்தது. மூன்றாவதாக ஓடிய துஷாரி வேகத்தை எடுத:தக்கொடுக்க 3.41 நெக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து ஓமாயா, கௌஷல்யா. மஹேஷா ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தனர்.