(இராஜதுறை ஹஷான்)

சிறு ஏற்றுமதி பயிர் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஐந்தாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையிலான இறக்குமதி தடைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மிளகு, புளி, சாதிக்காய், கசகஸா, இஞ்சி மற்றும் கராம்பு   உள்ளிட்ட சிறு ஏற்றுமதி  வாசனை திரவியங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நடவடிக்கையின் ஊடாக சிறு ஏற்றுமதி உற்பத்திகளை முன்னெடுக்கும் 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் நன்மையடைவதுடன், உள்ளுர் உற்பத்திகளும் பாதுகாக்கப்படும்.

ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளை முறையானதொரு சுற்றறிக்கையின் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்களை உள்ளுர் உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.