தோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கழுத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ தோள்பட்டையில் வலி உண்டாகும்.

தோள் மூட்டுகளில் ஏற்படும் தொற்றுகளால் கூட தோள் பட்டையில் வலி உண்டாகும். இந்த தருணங்களில் தோள்பட்டை மூட்டுகளை அசைத்தாலே வலிக்கும். இந்நிலையில் தோள் மூட்டில் உள்ள நீர் சுரப்பியில் புண் ஏற்படுவதால் Shoulder Impingement Syndrome என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த தருணங்களில் தோள்பட்டைகளை அசைக்கவே இயலாது. இதற்கு நவீன முறையிலான நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஆறு முதல் பத்து வாரங்கள் வரை வைத்தியர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை வைத்திய பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.