2020 ஆம் ஆண்டின்  “மிஸிஸ் வேர்ல்ட்” - “உலக அழகுத் திருமதி”  என்ற பட்டத்தை சுவீகரித்தார் இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி. 

அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில்  பங்குபற்றிய கேரோலின் குறித்த விருதை பெற்றுள்ளார். 

ஏற்கெனவே அவர் “ மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு “மிஸிஸ் வேர்ல்ட்” - “உலக அழகுத் திருமதி”  இலங்கை பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இந்த விருதை முதலாவது தடவையாக 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.