அமெரிக்காவின் புளோரிடாவில் கடற்படைதளத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுசம்பவத்தில்  நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த  விமானப்படை அதிகாரியொருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது தாக்குதலை மேற்கொண்டவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

பயிற்சிகளிற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையிலேயே சவுதிஅரேபிய அதிகாரிதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

உடனடியாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பென்சகோலா என்ற இடத்தில் உள்ள கடற்படை தளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சவுதிஅரேபியாவிற்கு நீண்டகாலமாக வழங்கப்படும் பயிற்சிகளில்  ஒரு பகுதியாக இடம்பெற்றுவந்த பயிற்சியில் மேலும் பல சவுதி அரேபிய கடற்படையினருடன் இந்த அதிகாரியும் கலந்துகொண்டிருந்தார் என  அமெரி;க்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒருவர், சவுதி அரேபியாவின் விமானப்படை அதிகாரியொருவர், எங்கள் மண்ணில் பயிற்சிக்காக வந்தவர் இந்த  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பல கேள்விகள்எழக்கூடும்  என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வகுப்பறையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் முகமட் சயீட் அல்சம்ரனி என இனம்காணப்பட்டுள்ளார் என பொக்ஸ்நியுசிற்கு தெரிவித்துள்ள  அதிகாரிகள் இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவமா என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆறு சவுதிஅரேபியர்களை விசாரணை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.