ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் தலவத்கொட பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றை திடீரென சுற்றிவளைத்த பாணந்துறை, வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர்,  3 தாய்லாந்து பெண்கள் உட்பட 12 பெண்களை முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்த 30 தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்ட 3 தாய்லாந்து பெண்களும் 18 தொடக்கும் 30 வயதுக்கு உட்பட்ட 9 இலங்கை பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம, கம்பஹா, அனுராதபுரம், இரத்தினபுரி, வெயாங்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனியார் வானொலி ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து சிவில் உடையில் சில பொலிஸார் குறித்த விபசார விடுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்லாந்து பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு 8 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண்களை தேர்ந்தெடுக்கும் வகையில் 5 ஆயிரம் முதல்  10 ஆயிரம் ரூபா வரையில் அறிவிடப்படுவது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.