கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினமும் 2 ஆவது நாளாக சாட்சியமளிக்க முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அவர் சுமார் நான்கு மணித்தியாலம் சாட்சியமளித்திருந்தார்.

நேற்றைய தினம் அவர் சாட்சியமளித்தபோது , இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.