நாட்டின் பல பாகங்களில் பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக  நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் சில திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கலாவாவியின் இரு வான் கதவுகளும் இராஜாங்கனை  நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவ்விடத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.