பொது மக்களுடன் தொடர்புடைய துறைகளில் சில ஆண்களின் குரல், கம்பீரமாக இல்லாமல் பெண்களின் குரலை போன்று மென்மையாக இருக்கும். இதற்கு கீச்சுக் குரல் என்றும், குரலில் பிரச்சினை என்றும் கூறுவார்கள். இத்தகைய பிரச்சினைக்கு தற்போது நவீன சிகிச்சை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.

பொதுவாக பிறக்கும் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் 12 வயது வரை குரல் மென்மையானதாகவும், ஒரே அளவுடையதாகவும் இருக்கும். 13 அல்லது 14 வயதில் ஆண் குழந்தைகளின் குரல் நாண் நீளமடையக்கூடும். அப்போது குரல்வளை விரிவடைந்து, அப்பகுதியில் உள்ள குருத்தெலும்பு புடைத்து வெளியில் தெரியும். ஆனால் 16 வயதிற்கு பிறகும் ஆண்களுக்கு குரல் நாண் விரிவடையாமல், இயல்பான அளவினதாகவேயிருந்தால், அது பெண் குரலில் ஒலியமைப்பு இருக்கும். இத்தகைய பிரச்சினைக்கு பியூபர்போனியா என்று பெயர்.

இதற்கு குரல் வளையை விரிவடையச் செய்ய வேண்டும். 30 நிமிடத்தில் இதனை செய்து விடலாம். ஆனால் தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகு குரல் நாணில் மாற்றம் ஏற்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். குரல்கள் தெளிவாக ஒலிப்பதற்கு நாவின் அசைவு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சிகிச்சையின்போது நாவின் அசைவு குறித்தும் ஆய்வு செய்து, அதற்குரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.