(பா.ருத்ரகுமார்)

 வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் நோக்கில் சுகாதார அமைச்சர் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்று இரவு 9.30 இற்கு அவசர பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பிலான  பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வைத்திய சேவை இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (31)     பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.