நாடளாவிய ரீதியில் உயிர்க்கொல்லிநோயாக இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு சிரமதானப் பணியொன்று நாளை (08.12.2019)ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த சிரமதான நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு - 15 அளுத்மாவத்தை வீதி ரெட்பான பகுதியில் இடம்பெறவுள்ளது.

புளூமென்டல் பொலிஸாரின் ஆரம்பகட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் பொலிஸாருடன் அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 14 நாட்களில் குறித்த பகுதியில் 14 சிறுவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.