நாட்டில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் இன்று மாலை 6.00 மணி வரையான காலப் பகுதி வரை தொடரும் சீரற்ற வானிலையால் உண்டான அனர்த்தம் காரணமாக 21 மாவட்டங்களில் 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும், ஒருவர் காணாமல்போயும் உள்ளனர். இதேவேளை 20 வீடுகள் பகுதியளவிலும் 943 வீடுகள் முழுமையாகவும் சோதமடைந்தும் உள்ளது.

மேலும் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 8,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.